விநாயகருக்கு இந்த 2 தீபங்களை ஏற்றினால் போதும். திருமணம் நடப்பதற்கு எப்பேர்ப்பட்ட தடை உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அது உடையும்.

vinayagar
- Advertisement -

நம்முடைய வாழ்வில் எவ்வளவு பெரிய தடைகள் இருந்தாலும் சரி, அதை தகர்ப்பதற்கு விநாயகர் வழிபாடு தான் சிறந்தது. இது நம்மில் எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் திருமணத்தடையை போக்க விநாயகரை நினைத்து செய்யவேண்டிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை கட்டாயம் விநாயகர் கோவிலில் தான் செய்யவேண்டும். எல்லா கோவிலிலும் விநாயகருக்கு சந்நிதி இருக்கும். ஆனால் விநாயகர் மூலவராக இருக்கக்கூடிய, விநாயகர் பிரதானமாக இருக்கக்கூடிய விநாயகர் கோவிலில் இந்த பரிகாரத்தை செய்வது என்பது மிக மிக சிறப்பு.

thengai-deepam

ஒரு நல்ல தேங்காயை வாங்கிக் கொள்ளவேண்டும். அந்த தேங்காயை இரண்டாக உடைத்து உள்ளே இருக்கும் தண்ணீரை எடுத்து விடுங்கள். இப்போது நமக்கு 2 முடி தேங்காய் கிடைத்திருக்கும். அதை ஒரு தட்டில் நிற்க வைக்க வேண்டும். பச்சரிசி பரப்பி நிற்க வைத்துக் கொள்ளலாம். கொஞ்சமாக மஞ்சளை பிசைந்து, தேங்காய் முடிக்கு அடியில் வைத்தும் நிற்க வைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு மண் அகல் விளக்கின் மீதும் நிற்க வைத்துக்கொள்ளலாம். எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும்போது தேங்காய் மூடிகள் கிழே சாய கூடாது, அதற்காகத்தான்.

- Advertisement -

ஒரு சிறிய மஞ்சள் துணியில் கொஞ்சமாக கோதுமை வைத்து சிறிய மூட்டையாகக் கட்டி இந்த முடிச்சை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்‌. 2 தேங்காய் முடிகளுக்கு, 2 கோதுமை முடிச்சுகள் தேவை. இப்போது இரண்டு தேங்காய் மூடிகளை உடைத்து நிற்க வைத்து இருக்கின்றோம் அல்லவா. அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த தேங்காய் எண்ணெயில் முடிந்து வைத்திருக்கும் கோதுமை முடிச்சை போட்டு, அந்த முடிச்சில் தீபத்தை ஏற்றி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான். தேங்காயில், தேங்காய் எண்ணெயில், கோதுமை தீபம் விநாயகருக்காக போடுவதுதான் இந்த பரிகாரம்.

wheat

எடுத்துக்காட்டுக்கு எப்படி சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவோம், அதேபோல்தான் தேங்காய் மூடியில் இந்த கோதுமை தீபத்தையும் விநாயகருக்கு ஏற்ற வேண்டும். குறிப்பாக இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகர் கோவிலில் காலை நேரத்தில் செய்து விடுங்கள். நேரம் என்பது உங்களுடைய விருப்பம் தான். உச்சிப் பொழுது வருவதற்கு முன்பாக பரிகார தீபத்தை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

யாருக்கு திருமணம் நடக்கவில்லையே அந்த நபர்தான் தீபத்தை ஏற்ற வேண்டும். தவிர அவர்களுடைய பெற்றோர்கள் தீபம் ஏற்றுவது என்பது முழு பலனை அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்காது.

vinayagar-abishegam

இப்படி எத்தனை வாரம் தீபம் ஏற்றலாம் என்பதும் அவரவருடைய விருப்பம் தான். 5 வாரங்கள், 11 வாரங்கள், 21 வாரங்கள் தொடர்ந்து ஏற்றிக் கொண்டே வாருங்கள். வரன் பார்க்கும் வேலையையும் நிறுத்திவிடாதீர்கள். இப்படி ஆன்மிக பரிகாரத்துடன், உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சுப காரியத்தில் ஏற்படும் தடைகள் சீக்கிரத்திலேயே விளக்கும். ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களுக்கும் சீக்கிரத்தில் விமோசனம் கிடைத்து விடும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -