உங்களுடைய கெட்ட நேரத்தை கூட, நல்ல நேரமாக மாற்றும் சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு. இந்தப் பொருள் வீட்டில் இருந்தால், விநாயகரே உங்கள் பக்கத்தில் இருப்பதாக அர்த்தம்.

vinayagar

எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், முதலில் விநாயகரை தான் நாம் வழிபட வேண்டும். பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் நடத்தும் போது கூட, மஞ்சள் பிள்ளையாரை முதலில் பிடித்து வைத்துதான் வழிபடுவார்கள். ஏனென்றால் தடைகளை நீக்கக் கூடிய சக்தி விநாயகருக்கு உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. நம்முடைய விக்னங்களை தீர்க்கும், அந்த விநாயகர் எப்போதுமே நமக்கு பக்கபலமாக இருக்க வேண்டும், விநாயகரின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும் என்றால், நம்முடைய வீட்டில், எந்த பொருளை வைத்து, எப்படி வழிப்பாட்டை செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

arugampul-vinayagar

நம்முடைய ஜாதக கட்டத்தில் நமக்கு எதிர்பாராத கெட்ட நேரம் வரும் தருணங்களில் கூட, நமக்கு நல்லதை நடத்தித் தரும் சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு என்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த விநாயகரே வந்து நம்முடைய வீட்டில் குடிகொண்டு, நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வாராம். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பொருளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான பாக்கியம், இன்று நமக்கு இந்த பதிவின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை எண்ணி, விநாயகருக்கு நன்றி சொல்லி அந்த பொருளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

நம்முடைய துயரத்தைப் போக்க கூடிய அந்த பொருள், கெட்ட நேரத்திலும் நல்லதையே நமக்கு தரக்கூடிய சக்தி, விநாயகரின் ஜாதக கட்டத்திற்கு உண்டு என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. விக்னங்களை தீர்க்கும் அந்த விநாயகப்பெருமானின் ஜாதகத்தை ஒரு செம்புத் தகட்டில் எழுதி, ஃபிரேம் போட்டு உங்களுடைய வீட்டு பூஜை அறையில் மாட்டிக்கொள்வது நமக்கு மிகவும் நல்ல பலனைத் தேடித்தரும்.

vinayagar-jathagam

உங்களால் செம்புத் தகட்டில் அச்சிட்டு, அந்த ஜாதகத்தை ஃபிரேம் போட்டு மாட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த ஜாதகத்தை பிரிண்ட் எடுத்து, பேப்பரிலாவது, பிரேம் போட்டு மாட்டி, வழிபாடு செய்ய தொடங்குங்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. பிரேம் போடாமல் வழிபட்டால், அந்த பேப்பர் கிழிய தொடங்கும். ஜாதகம் கிழியக் கூடாது. ஆகையால்தான் ஃபிரேம் செய்து வழிபாடு செய்ய சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

தனியாக பூஜை அறை இருப்பவர்கள் மட்டும்தான் இதை தங்களுடைய வீடுகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. உங்கள் வீட்டு ஹாலில் கூட இந்த ஜாதகத்தை மாட்டிக்கொள்ளலாம். இதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, தினம்தோறும் பூ வைத்து, வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது, அந்த ஜாதகத்தை தொட்டு உங்கள் கண்ணில் ஒத்திக் கொண்டு சென்றால், நீங்கள் செல்லக்கூடிய காரியம் தடையில்லாமல் நடக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

vinayagar-5

ஒருவேளை உங்களுடைய ஜாதக கட்டத்தில் நேரம் சரியில்லை என்றாலும், அந்த நேரத்தில் நடக்கக்கூடிய விபரீத விளைவுகளை கூட, விநாயகரின் இந்த ஜாதககட்டம் தடுத்து நிறுத்துமாம். தினம்தோறும் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை இந்த ஜாதகத்தை பார்த்து வணங்கி வருபவர்களுக்கு வெற்றிகள் குவியும் என்பதில் சந்தேகமே இல்லை.

manjal-pillaiyar

இந்த வழிபாட்டோடு சேர்ந்து, தினமும் காலை கண்விழித்ததும் உங்களது வலதுகை மோதிர விரலை பூமாதேவி மேல் வைத்து, இன்றைய தினம் எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, கண்விழிப்பது நமக்கு உற்சாகத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த இரண்டு குறிப்புகளையும் பின்பற்றி வாழ்க்கையில் ஏற்படுகின்ற இக்கட்டான தருணங்களை எதிர்கொண்டு, தோல்விகளைத் தகர்த்தெறிந்து வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் ‘கடன் பிரச்சனை தீர’ சமையலறையில், செய்ய வேண்டிய ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.