செல்வத்தையும் வளத்தையும் அல்லி தரும் கணபதி மந்திரம்

Vinayagar-1

இன்று சங்கடஹர சதுர்த்தி நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படும் “சங்கடங்களை” நீக்கி நமக்கு வளமையையும் ஞானத்தையும் வழங்கும் முதன்மை கடவுளான விநாயக பெருமானுக்குரிய தினம் .பொதுவாக நாம் எந்த ஒரு விஷயத்தையும் தொடங்குவதற்கு மூலப்பொருட்கள் அல்லது அடிப்படையான பொருட்கள் அவசியம் அவை சரியாக இருந்தால் தான் மேற்கொண்ட செயல்களை சிறப்பாக செய்ய முடியும். அதுபோல்தான் நம் அனைவரின் வாழ்வு சிறப்பாக இருக்க செல்வம் அவசியம் அப்படி நம் வாழ்க்கைக்கு செல்வத்தையும் வல்லமையையும் தருபவர் “விநாயகர்” அந்த விநாயகரை வழிபட முனிவர்களால் நமக்கு அருளப்பட்ட மந்திரம் தான் இந்த “ரின் ஹர்த” மந்திரமாகும்.

vinayagar

மந்திரம்:
ஓம் கணேஷ் ரின்னம் ச்சிந்தி வாரேண்யம் ஹுங் நம பட்

இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். இம்மந்திரத்தை தினமும் காலையில் விநாயகர் சந்நிதானத்திலோ அல்லது படத்திற்கு முன்போ 108 முறை உரு ஜெபித்து வர சில நாட்களிலேயே உங்களிடம் ஒரு நேர்மறையான மாற்றத்தை உணர ஆரம்பிப்பிப்பீர்கள் மேலும் தொடர்ந்து ஜெபித்து வர உங்களிடம் உள்ள தீவினைகள் நீங்கி தரித்தரம் ஒழிந்து உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். தினமும் இதை ஜபிக்க இயலாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஜபித்து பிள்ளையாரின் அருளை பெறலாம்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
முருகன் அஷ்டோத்திர சத நாமாவளி

English:
There is a mantra called rin harth mantra. By chanting this mantra one can get wealth and all needs. Its Ganapathi mantra in Tamil.