காதலர் தினத்தை நியூவா-வில் கொண்டாடிய விராட் அனுஷ்கா காதல் ஜோடி. நியூவா எங்கு உள்ளது தெரியுமா ? அதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

Nueva

இந்திய அணியின் தற்போதைய மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த ஆண்டு அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார். இன்னும் இவர்கள் காதல் ஜோடிகளாகவே உலகம் சுற்றி வருகின்றனர்.

Nueva-Kohli

இந்நிலையில் விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இன்று காதலர் தினத்தினை நியூவாவில் கொண்டாடினர். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். நேற்று இரவு எனது காதலுடன் என்று அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நியூவா என்ற இடம் டெல்லியில் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் அது விராட் கோலியின் சொந்த ரெஸ்டாரண்ட் ஆகும். மிகுந்த காஸ்ட்லி ஹோட்டலான அதில் இந்தியவீரர்கள் பலர் தங்களது கொண்டாட்டங்களை கொண்டாடியுள்ளனர். பணக்காரர்கள் மட்டுமே செல்லும் அளவிற்கு ரொம்பவே ரிச் ரெஸ்டாரண்ட் நியூவா என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி அவரது ஹோட்டலில் அனுஷ்காவுடன் நேற்று இரவினை கழித்து மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

நீ சூப்பரா வருவ. இளம் வீரரை தன் வீட்டிற்கு அழைத்து பேட்டிங் ஆலோசனை வழங்கிய சச்சின். ஆனால் அவர் உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வாகவில்லை – இளம் வீரர் வேதனை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்