என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க. இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி – ட்விட்டர் பதிவு

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பேட்டிங்கை முதல் 10 ஓவர்களில் இந்திய அணி சரியாக விளையாடாமல் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

hitman

பிறகு பின்வரிசை வீரர்களின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ராயுடு 90, ஷங்கர் மற்றும் பாண்டியா 45 ரன்கள் ஷங்கர் நியூசிலாந்து பாண்டியா ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு நியூசிலாந்து அணி 253 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து விளையாடியது. நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றிக்குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு எழுந்து இந்திய அணி சிறப்பான வெற்றியை அடைந்துள்ளது. நமது பலத்தினை அனைவரும் தெரியும்படி வெளிபடித்தி உள்ளனர்.

- Advertisement -

அணி வீரர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் விராட் கோலி. இந்த தொடர் முடிந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

குறைவான ஸ்கோர் அடித்தும் இவர்கள் சிறப்பாக ஆடியதால் வெற்றி பெற்றோம் – ரோஹித் சர்மா

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -