இந்திய அணியின் பவுலிங் மெஷின் பும்ரா அல்ல. இவர்தான் என்று குறிப்பிட்ட – கோலி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்துவிட்டது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக ஜாதவ் மற்றும் தோனி ஆகியோர் அருமையாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

Jadhav

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நாக்பூர் சென்றடைந்தனர். நாக்பூர் புறப்படும் சமயத்தில் விமானம் ஏறும் முன்பாக இந்திய அணி கேப்டன் கோலி தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார்.

அதில், அடுத்து நாக்பூர் செல்கிறோம் என்னுடன் இருப்பவர் இந்திய அணியின் பேஸ் மெஷின் (வேக இயந்திரம்) ஷமி என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :

இந்திய அணியின் பேட்டிங் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி தற்போது இந்திய அணியின் பேஸ் மெஷின் என்று ஷமியை குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக ஷமி சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கெயில் – மனசாட்சி இல்லாமல் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய கெயில்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்