192 நாட்களில் கருத்தரிப்பு உண்டாக இந்த 1 பரிகாரத்தை இந்த தெய்வத்திற்கு செய்து பாருங்கள். பலன் நிச்சயம் உண்டாகும்.

thatchina-moorthy-baby

அம்மா என்று அழைக்க ஒரு பிள்ளை இல்லையே என்கிற ஏக்கம் ஒரு சில பெண்களுக்கு இருந்து வருகிறது. அதுவும் இந்த காலகட்டத்தில் நிறைய பேருக்கு குழந்தை பிறப்பு தாமதமாவது ஒரு குறைபாடாகவே சமூகத்தில் இருந்து வருகிறது. இதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு வகையும் காரணமாக அமைகிறது. பிள்ளை இல்லை என்றால் உடனே பெண்களை தான் குறை கூறுகிறார்கள். இப்போது ஆணுக்கும் இதில் சரி சமமாக பங்கு கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

baby-cry

அப்படியும் பல வருட காலமாக குழந்தை இல்லாதவர்கள் இறைவனை நாடிச் செல்கிறார்கள். ஏறாத கோயில் இல்லை, ஏற்றாத தீபம் இல்லை என்று புலம்புபவர்கள் உண்டு. குழந்தை இல்லையே என்கிற கவலையை விட மற்றவர்களின் பேச்சை கேட்டு பதில் சொல்ல வேண்டுமே என்கிற கவலை மன அழுத்தத்தை உண்டாக்கி விடுகிறது. அந்த மன அழுத்தம் இன்னும் அதிக பிரச்சினையை அந்த தம்பதியர்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட காரணமாக அமைகிறது. மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு இறைசிந்தனை அவசியம் தேவைப்படுகிறது.

நம்பிக்கையை முதலில் கைவிடாதீர்கள். பத்து வருடம் கழித்து கூட குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நம்பிக்கையை தளர விடுவது முறை அல்ல. நவக்கிரகங்களையும், தேவர்களையும் ஆட்சி செய்யும் தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தால் உங்கள் பிரச்சனைகள் தீரும். ஒவ்வொரு வியாழன் கிழமை அன்று ஒரு வேளை மட்டும் உபவாசம் இருந்து மாலை நேரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று மனதார வேண்டிக் கொண்டு ஒரு அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து தீபமேற்ற வேண்டும்.

thatchinamoorthy

இவ்வாறு தொடர்ந்து 192 நாட்கள் வரை செய்ய வேண்டும். இந்த 192 நாட்களுக்குள் வரும் வியாழன் கிழமையில் தவறாமல் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். தம்பதியருக்குள் ஆண் பெண் இருவரில் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். பெண்களாக இருந்தால் மாதவிடாய் சமயத்தில் மட்டும் கணவனை ஏற்ற கூறுவது அவசியமாகும்.

- Advertisement -

நன்மைகளை அருளும் குருவாக தட்சிணாமூர்த்தி அருள் புரிவதால் இவரை வணங்குபவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த கிழமை வியாழன் கிழமையாக இருப்பதால் வியாழன் கிழமையில் விரதம் இருந்து மாலை வேளையில் நெய் தீபம் ஏற்றி வருவது கேட்ட வரத்தை அருளும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் எவ்வளவோ கோவில் குளம் என்று சென்று வந்திருப்பார்கள். அப்படியும் பலன் தராத பட்சத்தில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்கள் விரதம் ஏற்ற நாளிலிருந்து 192 நாட்களுக்குள் கருத்தரிப்பு உண்டாகும் என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

baby

குழந்தை இல்லாதவர்கள் முதலில் நமக்கும் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கையான உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் குழந்தையைப் பற்றிய சிந்தனையை வைத்துக் கொள்ளாமல் உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபாடுகள் செலுத்தி மனதை திசை திருப்பிக் கொள்ள வேண்டும். உங்களிடம் யார் குழந்தையை பற்றி பேசினாலும் உடனே மன வருத்தம் கொள்ளாமல் விரைவில் எங்களுக்கும் குழந்தை பிறக்கும் என்று மகிழ்ச்சியுடன் அவர்களிடம் தெரிவியுங்கள். மன இறுக்கத்தை தளர்த்த முயற்சி செய்யுங்கள். முழுமையாக இறைவனை நம்புங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த 3 விஷயங்களை செய்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் இல்லையாம்! இதில் எதையாவது நீங்களும் செய்திருக்கிறீர்களா என்று பாத்துக்கோங்க?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.