- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிற்காத இடம் விற்க பரிகாரம்

விற்காத இடம் விற்க பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்து முதலில் இடத்தை வாங்குவோம் என்று நினைப்பார்கள். ஒரு சிலருக்கு இடம் வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கும். அதையும் மீறி இடம் வாங்கினாலும் அந்த இடத்தில் வீடு கட்ட முடியாமலும், வீட்டை கட்டினாலும் அதில் குடியேற முடியாமலும் அதை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த இடத்தையோ அல்லது வீட்டையோ விற்றால் தான் பிரச்சினைகள் தீரும் என்று முயற்சி செய்பவர்களுக்கு விரைவிலேயே இடம் விற்பதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு இடத்தையோ வீட்டையோ வாங்குவதற்கு செவ்வாய் பகவானின் அருள் எந்த அளவிற்கு வேண்டுமோ அதே போல் தான் ஒரு இடத்தையோ அல்லது வீட்டையோ விற்க வேண்டும் என்றால் அதற்கும் செவ்வாய் பகவானின் அருளும் குரு பகவானின் அருளும் வேண்டும். செவ்வாய் நீச்சமடையும் பொழுது தான் இடத்தை விற்பதற்குரிய சூழ்நிலை என்பது உண்டாகும். இதன் அடிப்படையில் நாம் சில பரிகாரங்களை செய்யும் பொழுது அந்த பரிகாரத்தின் பலனால் விரைவிலேயே இடத்தை விற்று விட முடியும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக சந்திர ஹோரையில் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை சந்திர ஹோரை என்பது காலை 10 மணியிலிருந்து 11 மணிக்குள்ளும் மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளும் வரும். நேராக விற்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய இடத்திற்கு சென்று அந்த இடத்தின் வடகிழக்கு மூலை என்று கூறக்கூடிய ஈசானிய மூலையில் இரண்டு அடி ஆழத்திற்கு குழியைத் தோண்டி அதற்கு அடியில் இருந்து கற்கள் இல்லாத மண்ணை மட்டும் எடுத்து வர வேண்டும்.

எடுத்து வந்த இந்த மண்ணை மறுநாள் அதாவது புதன்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் ஒரு தலை வாழை இலையை விரித்து நாம் எடுத்து வந்த மண்ணை போட்டு அதில் பன்னீரை தெளித்து நன்றாக பிணைந்து மூன்று பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். இந்த மூன்று பிள்ளையாருக்கும் சந்தனம் குங்குமம் வைத்து அருகம்புல்லை அதன் மேல் வைத்து வாசனை மிகுந்த மலர்களையும் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு விரைவிலேயே அந்த இடம் விற்க வேண்டும் அதை விற்று வரக்கூடிய பணத்தை வைத்து என்னுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று முழு மனதோடு விநாயகப் பெருமானிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வேண்டி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். பிறகு அந்த மூன்று மண் பிள்ளையாரையும் எடுத்துக்கொண்டு ஓடுகின்ற நீரில் தங்கள் கைப்பட கரைத்து விட வேண்டும். இந்த முறையில் நாம் விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் விரைவிலேயே அந்த இடம் விற்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:குரு சுக்ர பஞ்சமி வழிபாடு

விநாயகப் பெருமானை முழுமனதோடு நம்பி இப்படி மண்ணில் பிடித்து வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு விரைவிலேயே இடம் விற்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்