வீட்டிற்கு வரும் விருந்தாளிங்க கிட்ட தெரியாம கூட இதையெல்லாம் காண்பிக்காதீங்க கண்ணு பட்டு போயிடும்! இதையெல்லாம் பார்த்தா கணவன் மனைவிக்குள்ள சண்டை வருமாம் தெரியுமா?

guest-thirusti
- Advertisement -

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் சிலர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று தெரியாமல் இருக்கிறார்கள். இதனால் குடும்பத்தில் சில குழப்பங்களும் வந்து போவது உண்டு. வீட்டிற்கு வருபவர்களிடம் ஆசை ஆசையாக எதையாவது காண்பித்து விட்டு, அதைப் பற்றி அவர்கள் ஒன்று கூற, நம் வீட்டிற்குள் பிரளயம் வெடிக்க ஆரம்பிக்கும். அந்த வகையில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் காண்பிக்கவே கூடாத சில விஷயங்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் முதலில் காண்பிக்கவே கூடாத ஒரு இடம் படுக்கை அறையாகும். சிலர் விருந்தாளிகள் வரப் போகிறார்கள் என்று தெரிந்ததும் முந்தைய நாளே வீடெல்லாம் சுத்தம் செய்து அழகாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பார்கள். குறிப்பாக படுக்கையறையை பார்ப்பதற்கே ரம்யமாக வைத்திருப்பார்கள். இது போல செய்யவே கூடாது.

- Advertisement -

படுக்கை விரிப்புகளை மாற்றுவது, ஆங்காங்கே கலைந்த சிலவற்றை சரி செய்து அழகாக வைத்திருந்தால் பார்ப்பவர்களுடைய கண்திருஷ்டி பட்டுவிடும். இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வரக்கூடும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. வாஸ்து ரீதியாகவும் கூட படுக்கையறையை மற்றவர்களுக்கு காண்பித்தால் திருஷ்டி தோஷம் உண்டாகும் எனப்படுகிறது, எனவே படுக்கை அறையை விருந்தாளிகளிடம் காண்பிக்க வேண்டாம்.

விருந்தாளிகள் வீட்டிற்கு வரும் பொழுது புதிதாக மளிகை பொருட்களை வாங்கி வைக்கக்கூடாது. மளிகை பொருட்கள் குவித்து வைத்திருந்தால் அது பார்ப்பவர்களுடைய மனதில் ஒருவித தூண்டுதலை ஏற்படுத்தும். இதனால் அவர்களுடைய கண் திருஷ்டி நமக்கு படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் குடும்பத்தின் செல்வ வளம் குறையும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

குடும்பத்தில் விருந்தாளிகள் மட்டுமல்ல நண்பர்கள், உறவினர்கள் யார் வந்தாலும் நம்முடைய சேமிப்பு எவ்வளவு? கையில் எவ்வளவு இருக்கிறது என்கிற கையிருப்பு தொகை பற்றிய விபரங்கள், நம்முடைய சம்பளம் எவ்வளவு? போன்ற பொருளாதார மற்றும் பணம் சம்பந்தப்பட்ட எந்த விதமான விஷயங்களையும் தம்பட்டம் அடித்துக் கொள்ள கூடாது. இதுவும் ஒரு வகையாக திருஷ்டி படுவது போல தான் எனவே இவற்றால் நமக்கு தீங்கு தான் வவிளையுமே தவிர நன்மை உண்டாகப் போவதில்லை.

வீட்டுக்கு வரும் நபர்களிடம் நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகளுடைய திறமைகளை சிலர் வெளி காட்ட வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை ஆனால் நம் குழந்தையின் சுட்டித்தனம், சுறுசுறுப்பு, அதிகமான அறிவாற்றல் போன்றவை அவர்களுக்குள் ஆச்சரியத்தை ஏற்படும், இதனால் அவர்களுடைய கண்கள் விரிந்தால் அதன் மூலம் நமக்கு கண் திருஷ்டிகள் படும்.

இதையும் படிக்கலாமே:
நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால், மகாலட்சுமியின் வருகை எப்போதும் நம் வீட்டிற்குள் இருக்கும்.

விருந்தினர்களிடம் நாம் வாங்கி குவித்திருக்கும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள், நகைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் போன்றவற்றை கூட ஓரளவுக்கு மேல் காண்பித்து அவர்களுக்கு ஏக்கத்தை உண்டாக்கக் கூடாது. எல்லோரிடமும் பண வசதி இருக்கும் என்று கூற முடியாது. நம் வீட்டிற்கு வருபவர்களுடைய வசதி நம்மை விட குறைவாக இருந்தால் அவர்களுக்குள் ஒரு தாக்கத்தை இது ஏற்படுத்தும் எனவே இந்த தேவையற்ற பந்தா காண்பிக்காமல் அவர்களுக்குள் ஏக்கத்தை ஏற்படுத்தி, அதை கண் திருஷ்டியாக நாம் வாங்கி கட்டிக் கொள்ளாமல் அமைதி காப்பது நல்லது.

- Advertisement -