தப்பித் தவறி கூட எதற்காகவும் இந்த நாட்களில் எல்லாம் மற்றவர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு விடாதீர்கள்!

annapoorani-food
- Advertisement -

விருந்தோம்பல் என்பது காலம் காலமாக நம் தமிழருடைய பண்பாடாக இருந்து வருகிறது. ஆனால் அது இன்று மெல்ல மெல்ல மறைந்து வருவது என்னவோ வேதனைக்கு உரியது தான். வழியில் செல்லும் வழிப்போக்கன் கூட தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் தான் திண்ணைகள் வைத்த வீடுகள் கூட கட்டப்பட்டது. ஆனால் இன்று சொந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் கூட, ‘இவர்கள் ஏன் இப்போது வந்தார்கள்?’ என்று நினைக்கத் தோன்றி விடும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. அப்படி இருக்க சாஸ்திர ரீதியாக இந்த நாட்களில் ஒருவருடைய வீட்டிற்கு சென்று நாம் உணவருந்தினால் தீராத பகை உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படியான நாட்கள் என்னென்ன? அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன? அதற்கு உரிய பரிகாரம் என்ன? என்பதை விரிவாகக் காண இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

food

என்றென்றும் விருந்தோம்பல் தமிழர் பண்பாடு ஆகும். விருந்து உபசரிப்புகளில் அறுசுவையும் கலந்து தடபுடலாக நடக்கும். உற்றார், உறவினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள், ஊரார் கூட வந்து கலந்து கொண்டு உரியவரை ஆசீர்வதித்து செல்வார்கள். கல்யாணம், காதுகுத்து முதல் கருமாதி வரை அனைத்திற்கும் விருந்து பரிமாறுவது தமிழர் பண்பாடு. விருந்துக்கு சென்றாலும் கிழமை பார்த்து செல்ல வேண்டும்.

- Advertisement -

வெள்ளி, சனி, திங்கள் விருந்துண்ண புதனாகும்,
கள்ள வியாழன் கசப்பிக்கும்-தெள்ளுகதிர்,
தீராப் பகை காட்டும், செவ்வாய் தனக்குமோ,
வாராப் பகையும் வரும்.

food

இப்பாடலின் மூலம் நம்மால் எளிதாக எந்தெந்த நாட்களில் ஒருவருடைய வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிடலாம்? எந்தெந்த நாட்களில் மற்றவர்களுடைய வீட்டில் கை நனைக்க கூடாது? என்பது விளங்குகிறது. வெள்ளி, சனி, திங்கள் மற்றும் புதன் இந்த நான்கு கிழமைகளில் எப்பொழுது வேண்டுமானாலும், நாம் தாராளமாக ஒருவருடைய வீட்டிற்கு சென்று உணவோ அல்லது விருந்தோ சாப்பிடலாம். இதனால் அவர்களுடன் நம்முடைய நட்புறவு மேலும் வலுவாகும்.

- Advertisement -

ஆனால் வியாழன் கிழமையில் உணவருந்த ஒருவருடைய வீட்டிற்கு நீங்கள் சென்றால் தீராத பகை உண்டாகும். வியாழன் கசப்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் விருந்து சாப்பிட மற்றவர்களுடைய வீட்டிற்கு சென்றால் நிச்சயம் தீராத பகை உண்டாகும். அதே போல ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமையில் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்த சென்றால் வராத பகை கூட தேடி வருமாம். பகை வளர்ப்பதற்க்கா உணவருந்த செல்கிறோம்? நம்மவர் என்கிற உரிமையில், நமக்கான உறவு என்கிற நம்பிக்கையில் தான் ஒருவருடைய வீட்டிற்கு மற்றவர்கள் உணவருந்த செல்கின்றனர். இப்படி பகையை வளர்த்து வர கூழோ, கஞ்சியோ நம் வீட்டிலேயே குடித்துக் கொண்டு இருக்கலாமே!

food

ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் வேறு வழியில்லாமல் இந்த நாட்களில் மற்றவர்களுடைய வீட்டிற்கு சென்று உணவு அருந்த நேர்ந்தால் அல்லது விருந்துக்கு செல்ல நேர்ந்தால் அதற்கு பரிகாரம் செய்து விட்டு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வியாழன் கிழமையில் உணவருந்த செல்லும் பொழுது வீட்டில் வெந்நீரை குடித்து விட்டு பின்னர் செல்லலாம். ஞாயிற்றுக் கிழமையில் நெய்யும், செவ்வாய் கிழமையில் பாலும் அருந்தி விட்டு செல்ல எத்தகைய தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும். வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் இது போல் பரிகாரம் செய்துவிட்டு பின்னர் நீங்கள் விருந்துக்கு செல்லுங்கள்.

- Advertisement -