விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் சாய் பாபா மந்திரம்

sai-baba-1

இப்பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஆசைக்காகத் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பேராசை எண்ணம் தான் ஒருவருக்கு தீமையை ஏற்படுத்துமே ஒழிய, நியாயமான ஆசைகள் எதுவாயினும் அதை அடைய முயற்சிப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் ஒரு சிலருக்குத் தாங்கள் என்ன தான் முயன்றாலும் அவர்களால் அந்த நியாயமான ஆசைகளை கூட நெறிவெற்றிகொள்ள முடிவதில்லை. அதனால் விரக்தியடைந்தவர்கள் மனநிம்மதி பெற மகான்களிடம் சரணடைகின்றனர். அப்படி தன்னைச் சரணடைந்தவர்களின் அத்தனை நியாயமான ஆசைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றுபவர் தான் “ஸ்ரீ சாய் பாபா” அவரை வழிபடுவதற்கான மந்திரம் தான் இது.

Sai baba aarti tamil

மந்திரம்:
“ஓம் ஸ்ரீ காலாதீத்தே நமஹ
ஓம் ஸ்ரீ ம்ரித்யுஞ்ஜய் நமஹ
ஓம் ஸ்ரீ ஆரோக்யஷம்தே நமஹ”

வியாழக் கிழமைகளில், அதிகாலையில் துயிலெழுந்து நீராடியபின் ஸ்ரீ சாய் பாபாவின் திரு உருவச் சிலை அல்லது அவரின் உருவப்படத்திற்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பின்பு ஒரு துணியில் நீங்கள் விரும்புகிற அளவிற்கு பணத்தையோ, நாணயங்களையோ வைத்து சாய் பாபாவிடம் உங்களின் கோரிக்கையை கூற வேண்டும். பிறகு சாய் பாபாவை மனதார நினைத்துகொகொண்டு மேலே உள்ள சாய் பாபா மந்திரம் அதை 21 முறை ஜபிக்க வேண்டும். அதன் பிறகு பணம் வைக்கப்பட்டுள்ள துணியை முடிந்து வைக்க வேண்டும். இந்த சாய்பாபா பூஜையை தொடர்ந்து 21 நாட்களோ அல்லது அதற்கு மேலேயோ உங்கள் கோரிக்கையை நிறைவேறும் வரை செய்ய வேண்டும். உங்கள் கோரிக்கையோ, வேண்டுதலோ நிறைவேறிய பின்பு அப்பணமுடிப்பை யாரேனும் ஒரு ஏழைக்கு தானம் அளித்து விட வேண்டும். அந்த “சாயிநாதன்” மீது திட நம்பிக்கையோடு செய்தால், அவரின் அருளால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

இதையும் படிக்கலாமே:
சாய் பாபா திருவடி மந்திரம்

English Overview:
Here we have Sai baba mantra in Tamil which can fulfill all our needs. This mantra needs to be chanted on Thursday.