சாய் பாபாவின் ஆசியை பெற உதவும் சாய் பாபா திருவடி மந்திரம்

Sai-baba-1

சாய் பாபாவின் திருவடிகளை பற்றி அவரிடம் நமது குறைகளை கூறி மனமுறுகின் வேண்டினால் அவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். சாய் பாவின் பரிசுத்தமான திருவடிகளை போற்றி பாடி அவரின் பரிசுத்தமான அருளையும் அன்பைபியும் அரவணைப்பையும் பெற உதவும் சாய் பாபா மந்திரம் இதோ.

sai-baba

சாய் பாபா திருவடி மந்திரம்:
சாய் நாதர் திருவடியே
சம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை அளிக்கும் திருவடியே
உந்தன் அற்புதத் திருவடியே!

மேலே உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது நல்லது. தினம் தோறும் கூற முடியாதவர்கள் வியாழ கிழமைகளில் கூறலாம். சாய் பாபாவின் அருளை பெற உண்மையான பக்தி அவசியம். அவரே எல்லாம், அவர் நிச்சயம் நமக்கு உதவுவார் என்ற முழுமையான நம்பிக்கையோடு அவரை வணங்குவது அவசியம். அதே போல கஷ்டங்கள் வரும் நேரத்தில் அவரை வணங்குவது, சந்தோஷம் வரும் நேரத்தில் அவரை மறப்பது போன்ற செயல்கள் உண்மையான பக்திக்கு அடையாளம் அல்ல. எது நடந்தாலும் அவரை மனதில் நிலை நிறுத்து அவரை எப்போதும் போற்றி துதிப்போர்க்கு அவரின் அருள் நிச்சயம் கிடைக்கும். இன்றைய சூழலிலும் சாய் பாபாவின் உண்மையான பக்தர்களுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் அவர் காட்சி கொடுத்து கொண்டிருக்கார் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இதையும் பார்க்கலாமே:
சாய் பாபா காயத்ரி மந்திரம்

English overview:
Here we given Sai baba mantra in tamil. This is called Sai baba thiruvadi mantra. This mantra mainly focus on the power of Sai baba foot. It has some devotional power. So if one touches Sai baba foot then he will get all his needs.