விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

0
236
astrology

விசாகம்

visaagam

இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும்.

பொதுவான குணங்கள்:

அறிவாளிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், கடமை உணர்வுடன் செயலாற்றுபவர்கள், ஆடம்பரப் பிரியர்கள், பணம் சேர்ப்பதில் ஆவல் கொண்டவர்கள், உணவு மற்றும் சிற்றின்பங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், மனித நேயமும், நியாய உணர்வும் உள்ளவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்கள்.
astrology-wheel

விசாகம் நட்சத்திரம் முதல் பாதம்:

இதன் அதிபதி செவ்வாய். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகளாகத் திகழ்வர். சொத்து சுகம் மட்டுமின்றி, நட்பையும் சுற்றத்தையும் விரும்புவார்கள். கோபம், எளிதில் உணர்ச்சிவசப்படுதல், பிடிவாதம், பிறரை நம்பாமை ஆகிய குணங்களும் இவர்களிடம் உண்டு.

விசாகம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:

இதன் அதிபதி சுக்கிரன். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகள். சுயநலம் மிகுந்தவர்கள். வாழ்க்கையை ரசித்து வாழ்வர். உணர்ச்சிபூர்வமாகத் திகழும் இவர்கள், நல்ல அறிவாளிகள். தன்னம்பிக்கையும், கலைகளில் ஈடுபாடும் உண்டு.
astrology wheel

விசாகம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:

இதன் அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் பக்திமான்கள். கணிதம், விஞ்ஞானத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். திட்டமிட்டு வாழ்பவர்கள். பிறரை நம்பமாட்டார்கள். உயர் பட்டங்கள், பதவிகளைப் பெறுவார்கள். புகழுடன் வாழ்வார்கள்.

விசாகம் நட்சத்திரம் நான்காம் பாதம்:

இதன் அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் பொருளீட்டுவதில் வல்லவர்கள். தாராளமாகச் செலவு செய்வார்கள். குடும்பப் பாசம் மிக்கவர்கள். சுகமான, ஆடம்பரமான, கௌரவமான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள். தாராள மனப்பான்மை இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபாடு இருக்கும். புகழை நாடுபவர்கள்.