Astrology : விசாகம் நட்சத்திரக்காரர்கள் அதிகம் செல்வம் ஈட்டுவதாற்கான பரிகாரங்கள் இதோ

visakam-natchathiram
- Advertisement -

நவகிரகங்களில் குரு பகவான் பிரகஸ்பதி என அழைக்கப்படுகிறார். தேவர்கள் அனைவருக்கும் சாஸ்திரங்களை கற்று தரும் தேவ குருவாகவும், முழுமையான சுப கிரகமாகவும் இருப்பவர் குரு பகவான் ஆவார். அந்த குரு பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நட்சத்திரமாக விசாகம் நட்சத்திரம் இருக்கிறது. இந்த விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் செல்வ நிலை உயர செய்ய வேண்டிய பரிகார முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

guru-bagawan

27 நட்சத்திரங்களின் வரிசையில் பதினாறாவதாக வரும் நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரகங்களில் முழுமையான சுபகிரகமான குரு பகவான் இருக்கிறார். இந்த விசாக நட்சத்திரத்தின் அதிதேவதை முருகப்பெருமான் ஆவார். விசாகம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், நான்காம் பாதம் விருச்சிகம் ராசியிலும் வருகிறது. விசாகம் நட்சத்திரக்காரர்கள் உடல், மனஉறுதி நிறைந்தவர்கள் ஆவர். விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான தனவரவுகள் மற்றும் அதிர்ஷ்டங்களையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

- Advertisement -

விசாகம் நட்சத்திரத்திரக்காரர்கள் வருடம் ஒரு முறை கஞ்சனூர் சுக்கிர பகவான் கோயிலுக்கும், ஆலங்குடி குரு பகவான் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் லட்சுமி நாராயணன் கோயிலுக்கு சென்று, பெருமாளுக்கு வெள்ளை நிற மலர்கள் மற்றும் மஞ்சள் நிற வாழைப்பழங்களை நைவேத்தியம் வைத்து வணங்க வேண்டும்.

kantha sasti kavasam lyrics

செவ்வாய்கிழமைகள் மற்றும் மாத சஷ்டி தினங்களில் முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். தொழில், வியாபாரங்களில் தடையின்றி தன வரவு உண்டாக ஒரு சிறிய மண்பாண்ட கோப்பையில் சுத்தமான நீரை ஊற்றி உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். தினமும் காலையில் பழைய நீரை ஊற்றி விட்டு புது நீரை அந்த மண்பாண்டத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
வாகன விபத்து தடுக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview;
Here we have Visakam natchathiram pariharam in Tamil. It is also called as Vishakha nakshatra in Tamil or Visakam natchathiram athipathi in Tamil or Guru bhagavan nakshatra in Tamil or Visakam natchathiram rasi in Tamil.

- Advertisement -