எப்பேர்ப்பட்ட இழப்புகளும், எப்பேர்ப்பட்ட கஷ்டங்களும் ஒரு நொடிப் பொழுதில் காணாமல் போக, தினம்தோறும் இதை நெற்றியில் இட்டுக் கொண்டு சென்றாலே போதும்.

bairavar

சிலருக்கு எதிர்பாராமல் சில சமயங்களில் எதிர்பாராத இழப்புகள் வந்துவிடும். ஓஹோ என்று செல்லும் தொழில் திடீரென்று நஷ்டத்தில் போய் விடும். 100 பவுன் நகை வைத்திருப்பார்கள். ஏதோ ஒரு கஷ்டம் வந்து அந்த நகை அனைத்தும் அடமானத்திற்கு சென்று விடும். சில சமயத்தில் அடமானம் வைத்த நகையை மீட்க முடியாமல், அது அப்படியே மூழ்கும் அளவிற்கு கூட பிரச்சினைகள் தலை விரித்து ஆட தொடங்கிவிடும். தீராத கஷ்டங்கள் துயரங்களில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள், என்ன செய்வது என்றே திண்டாடி கொண்டு இருப்பவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள சுலபமான ஒரு பரிகாரம் தான் இது.

நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பார்க்கும் பட்சத்தில் நல்ல பலனை பெற முடியும். பரிகாரத்தை பார்த்துவிடலாம். சுத்தமான பசும் சாணத்தால் செய்த விபூதியை, நல்ல கடைக்குச் சென்று வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். சுத்தமான பசு சாணத்தால் செய்த விபூதியில் இந்த பரிகாரத்தை செய்தால் முழுமையான பலனை உடனடியாக பெற முடியும்.

வெள்ளிக்கிழமை காலை வேளையில், நீங்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு காலையில் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, வாசனை மிகுந்த மல்லிகைப் பூக்களை, உதிரி புஷ்பங்களை வாங்கி தயாராக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு தாம்பூல தட்டையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சுத்தமான விபூதியை அந்த தாம்புல தட்டில் கொஞ்சமாக கொட்டி நன்றாக பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.

vibuthi

தாம்புல தட்டில் பரவலாக இருக்கும் விபூதியில் உங்களது மோதிர விரலால் ‘ஓம் விஷ்ணு பைரவாய நமஹ’ ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை எழுதி அந்த தட்டில் இருக்கும் விபூதிக்கு, அதில் எழுதி வைத்திருக்கும் அந்த நாமத்திற்கு உதிரி மல்லிகை புஷ்பங்களால், 108 முறை இந்த இரண்டு மந்திரங்களை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு விபூதியில் இருந்து மல்லிகை பூக்களை மட்டும் தனியாக எடுத்து, நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். அந்தப் பூக்கள் காய்ந்த உடனே கால் படாத இடத்தில் எடுத்து போட்டு விடுங்கள்.

இந்த விபூதி தட்டு ஒருநாள் முழுவதும் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் இந்த விபூதியை ஒரு சிறிய டப்பாவில் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாளிலிருந்து தினம்தோறும் அந்த விபூதியை உங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றால் எதிர்பாராது வரக்கூடிய இழப்புகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

vibuthi

தினமும் அந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது மூன்று முறை உங்களுடைய குல தெய்வத்தின் பெயரையும்’ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிப்பது மேலும் நல்ல பலனை கொடுக்கும். 48 நாட்கள் தொடர்ந்து இந்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டு வந்தால் கஷ்டம் காற்றில் பறந்து கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போய்விடும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.