வருடத்தில் நான்கு முறை இந்த விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு வரும். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1, இந்த நான்கு நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய காலமாக நமக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இது பெருமாளுக்கு உகந்த நாள் வைகாசி முதல் நாள், நாளைய தினம் மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கிறது.
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது வைகாசி முதல் நாள் நள்ளிரவு 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இருக்கும். இதே போலத்தான் ஆவணி ஒன்றாம் தேதி, கார்த்திகை ஒன்றாம் தேதி, மாசி ஒன்றாம் தேதி, நள்ளிரவு 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
ஒரு வருடத்தில் வரும் 4 விஷ்ணுபதி புண்ணிய காலத்திலும் எவர் ஒருவர் பெருமாள் கோவிலுக்கு சென்று பின் சொல்லக்கூடிய முறைப்படி, பெருமாளை வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுடைய வாழ்வில் வறுமை நீங்கும், கடன் சுமை குறையும், செல்வ வளம் அதிகரிக்கும் பெருமாளின், முழுமையான ஆசீர்வாதமும் கிடைக்கும். நாளைய தினம் விஷ்ணுபதி புண்ணிய கால பெருமாள் வழிபாட்டை எப்படி செய்வது. ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து தெரிந்து கொள்வோமா.
வைகாசி 1 விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு
நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே சுத்தமாக எழுந்து குளித்து விடுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். உங்கள் கையில் 27 பூக்கள் இருக்கட்டும். இது ஒரு கணக்குக்காகத்தான். மல்லிகை பூ முல்லைப் பூ, துளசி இல்லை, இதற்கு எதை வேண்டும் என்றாலும் நீங்கள் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட இந்த பூ தான் தேவை என்று எந்த கட்டாயமும் கிடையாது.
நேரா பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, பெருமாளை தரிசனம் செய்து விடுங்கள். பெருமாளை 27 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை பெருமாளை வளம் வரும் போதும் ஒவ்வொரு பூவை கொடிமரத்துக்கு கீழே வையுங்கள். அதுதான் கணக்கு. கையில் இருக்கும் 27 பூக்கள் தீர்ந்ததும், 27 முறை சுற்றி முடிந்து விட்டது என்று அர்த்தம்.
இப்படி பெருமாள் கோவிலை சுற்றி வரும் போது, பெருமாளின் மந்திரத்தை சொல்ல வேண்டும். ‘ஓம் நமோ நாராயணா, கோவிந்தா, பெருமாளே’ என்று உங்களுக்கு பெருமாளின் எந்த நாமம் பிடித்திருக்கிறதோ, அந்த நாமத்தை மந்திரமாக உச்சரிங்கள். ஸ்ரீ ராம ஜெயம் சொன்னாலும் தவறு கிடையாது.
குறிப்பாக நாளைய தினம், அதாவது வைகாசி 1ஆம் தேதி காலை 10:30 மணிக்குள் இந்த வழிபாட்டை நீங்கள் நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்லதொரு திருப்பம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: திருமணம் ஆகாத பெண்கள் செய்ய வேண்டிய துர்க்கை அம்மன் வழிபாடு
இது தவிர பெருமாளுக்கு துளசி இலையும் வாங்கிக் கொடுப்பது, பெருமாளுக்கு உங்கள் பெயரைச் சொல்லி தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்வது போன்ற வழிபாடுகளை எல்லாம் எப்போதும் போல நீங்கள் நாளைய தினம் செய்து கொள்ளலாம். நாளைய தினம் இந்த நேரத்தை யாரும் தவற விடாதீர்கள். வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்