- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு

- Advertisement -

மாசி மாதம் ஒன்றாம் தேதி என்பது விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலத்தில் நாம் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை 27 முறை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அனைவரும் கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை அந்த நேரத்தில் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் வீட்டிலேயே எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விஷ்ணுபதி புண்ணிய காலம் வழிபாடு

வருடத்திற்கு நான்கு முறை வரக்கூடியது தான் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்றும் அதில் ஒன்றாக தான் மாசி மாதம் முதல் தேதி வரக் கூடிய விஷ்ணுபதி புண்ணிய காலம் திகழ்கிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். இது குறிப்பிட்ட நேரம் தான் இருக்கும். அந்த நேரத்திற்குள் பெருமாளை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதோடு செல்வ வளமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளையும் நேரத்தையும் தவறவிடாமல் வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வருடம் மாசி ஒன்றாம் தேதி பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. அன்றைய தினத்தில் காலை 10 மணிக்குள் விஷ்ணுபதி புண்ணிய காலத்திற்குரிய வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். அதனால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் பெருமாளின் படம் கண்டிப்பாக இருக்கும். பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். துளசி இலைகளை வாங்கி வந்து பெருமாளின் படத்திற்கு சாற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பெருமாளுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி நெய் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து அதில் நான்கு துளசி இலைகளையும் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தையும் போட்டு பெருமாளின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இப்பொழுது பெருமாளை முழு மனதோடு நினைத்துக் கொண்டு தங்களுடைய வேண்டுதலை முன்வைத்து “ஓம் நமோ நாராயணாய” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு பெருமாளுக்கு முன்பாக இருக்கும் அந்த தண்ணீரை எடுத்து வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பகிர்ந்து குடிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் நாம் எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டினோமோ அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும். மேலும் அன்றைய நாளில் நாம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதும் மகாலட்சுமிக்குரிய அஷ்டகத்தை பாராயணம் செய்வதும் மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது. இதனால் பண வரவும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:கொடுத்து ஏமாந்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க

பெருமாளுக்கு உரிய விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் முழுமனதோடு வீட்டிலேயே பெருமாளை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்ய பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்..

சற்று முன்