சொந்தத் தொழிலில் கோடிகோடியாக லாபம் கொட்ட வேண்டுமா? ஒருமுறை இந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலே போதும். தொழிலில் நஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.

vishwakarma

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு தெரியாத ஒரு தெய்வத்தை பற்றி தான், இன்று இந்த பதிவின் மூலம்  தெரிந்து கொள்ளப் போகின்றோம். சொந்தத் தொழில் செய்யும் யாராக இருந்தாலும், இவரை வழிபாடு செய்தால் தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கி, அந்த தொழிலில் வெற்றி அடைவது உறுதி. நிச்சயமாக நொடிந்து போன தொழிலாக இருந்தாலும் சரி, அது கூடிய விரைவில் முன்னேற்றம் அடைந்து, கோடிகோடியாக லாபங்களை கொட்ட போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. உங்களுடைய சொந்த தொழிலுக்கு, எந்த அளவிற்கு முதலீடு செய்து வைத்து இருக்கிறீர்களோ, அதற்கான லாபத்தை நிச்சயம் இந்த வழிபாடு உங்களுக்கு ஈட்டித் தரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

vishwakarma1

ஒரு லட்ச ரூபாயை தொழில் முதலீடு செய்துவிட்டு, ஒரு கோடி ரூபாய் லாபத்தை உடனடியாக எதிர்பார்ப்பது மிகவும் தவறு. உங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபம் நியாயமான நேர்மையான முறையில் உங்களை வந்து சேர, இந்த வழிபாடு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு பதிவுக்கு செல்லலாம். இன்று நாம் பார்க்கக்கூடிய, தொழிலை முன்னேற்றி தரக்கூடிய தெய்வம் ‘விஷ்வகர்மா’. இவரை ‘ஸ்ரீ விராட் விஸ்வப்பிரம்மம்’ என்றும் சொல்லுவார்கள்.

குறிப்பிட்ட சில குலத்தவர்களுக்கு மட்டுமே இந்த இறைவன் என்று, ஒரு குறிப்பிட்ட சில மக்கள் மட்டுமே இந்த தெய்வத்தை வழிபடும் வழக்கத்தை வைத்துள்ளார்கள். அப்படி கிடையாது. இந்த தெய்வத்தினை எல்லோரும் பொதுவாக மனமார வணங்கலாம். இந்த உலகத்தையே படைத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரது கையில் உலக உருண்டையை செதுக்குவது போல காட்சி இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

சொர்க்க உலகம், பாதாள உலகம், பூலோகம் இந்த மூன்று உலகத்திற்கும் உயிர் கொடுத்து, பிராணசக்தியை கொடுத்த தெய்வம் என்ற பெருமையும் இந்த விஸ்வகர்மாவிற்கு உண்டு. இந்த தெய்வத்தை வழிபட்டு வந்தால், மற்ற தெய்வங்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்துவிடும். அதாவது குலதெய்வத்தை நினைத்து கொண்டு, அதன் பின்பு விஸ்வகர்மாவை நினைத்து நீங்கள் செய்யும் தொழில், உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து ‘ஓம் விஸ்வகர்மாய நமோ நமஹ’ இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி உங்களது அன்றாட செயல்பாட்டை தொடங்கி பாருங்கள்.

- Advertisement -

உங்களது தொழிலானது, நொடிந்து போன தொழிலாக இருந்தாலும் சரி, நஷ்டமாக இருக்கும் தொழிலாக இருந்தாலும் சரி, கடைசியாக இழுத்து மூட கூடிய நிலைமையில் இருக்கும் தொழிலாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு முறை இவரை மனதார வழிபாடு செய்து பாருங்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அதிகப்படியான லாபத்தை பெற்று, உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதை நீங்கள் நிச்சயம் உணர முடியும். உங்களது நிலைமையே தலைகீழாக மாறிவிடும். நீங்கள் செய்யும் தொழிலில் அதிகப்படியான லாபம் கிடைத்திருந்தாலும், மேலும் மேலும் தொழில் முன்னேற்றம் அடைந்து கொண்டே செல்ல இந்த வழிபாட்டைச் செய்வது தவறும் கிடையாது.

kuberan

இன்னும் நமக்கெல்லாம் புரியும்படி சொன்னால், குபேரரின் கொள்ளு பாட்டனார் தான் இந்த விஷ்வகர்மா என்றும் சொல்கிறது வரலாறு. இப்போது புரிகிறதா? கோடிகணக்கில் பணம் உங்களுக்கு எப்படி வரும் என்று! விஸ்வகர்மாவின் திருவுருவப் படத்தை நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்து, வழிபாடு செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல மாற்றங்களை உங்களால் உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டு வாசலில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்! இது வந்த மகாலட்சுமியை வெளியில் துரத்துவதற்கு சமமாகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.