வீட்டு வாசலில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்! இது வந்த மகாலட்சுமியை வெளியில் துரத்துவதற்கு சமமாகும்.

mahalakshmi

விளக்கு ஏற்றுவது என்பது வீட்டிற்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு செயலாகும். விளக்கு எரியாத வீட்டில் துர்தேவதைகள் குடி கொள்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. விளக்கு தினமும் எரிந்து கொண்டிருக்கும் வீட்டில், துர்தேவதைகள் நீங்கி நல்ல தேவதைகளும், தேவாதி தேவர்களும் ஆசீர்வதிப்பதாக ஐதீகம் உள்ளது. அந்த வகையில் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சிலர் தீபம் ஏற்றுவது வழக்கம். அப்படி வாசல் படியில் தீபம் ஏற்றுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது தான். அது என்ன தவறு? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

agal vilakku

சந்தன, குங்குமம் இடாமல் விளக்கு ஏற்றுவது என்பது தீபம் ஏற்றும் பொழுது செய்யக்கூடாத மிகப்பெரிய தவறு ஆகும். சந்தன, குங்குமம் இட்ட தீபத்தை தான் எப்பொழுதும் எண்ணெய் ஊற்றி அதன் பின் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதே போல கெட்ட காரியங்கள் செய்யும் பொழுது சந்தன, குங்குமம் இடாமல் தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வாசல் படியில் தீபம் ஏற்றும் பொழுது வெறும் தரையில் வைத்து தீபத்தை ஏற்ற கூடாது. அது போல் வெள்ளிக்கிழமைகளில் வாசலில் தீபம் ஏற்றும் பொழுது முதலில் நிலவாசலில் இருக்கும் தீபத்தை தான் ஏற்ற வேண்டும். அதன் பின்னர் தான் வீட்டிற்கு உள்ளே வந்து பூஜை அறையில் இருக்கும் தீபத்தை ஏற்ற வேண்டும். பூஜை அறையில் தீபத்தை ஏற்றி விட்டு வாசலில் ஏற்றக்கூடாது. வாசலில் இருக்கும் மகாலட்சுமியை வரவேற்பதற்கு வாசலில் தான் முதலில் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். இதனை சரியாக கடைபிடிக்காதவர்கள் இனி மாற்றிக் கொள்ளலாம்.

vilaku

அது போல் வாசலில் தீபத்தை ஏற்றுபவர்கள் சிறிய அளவிலான தட்டு அல்லது இலை வைத்து அதன் மேல் தீபத்தை ஏற்ற வேண்டும். வெறும் தரை அல்லது நில வாசல் படியில் வைத்து தீபத்தை ஏற்றக்கூடாது. நில வாசல் படிக்கு மேலே வைத்து தீபம் ஒருபொழுதும் ஏற்றக்கூடாது. நில வாசல் படிக்கு கீழே நீங்கள் சந்தன, குங்குமம் இடுவீர்கள் அல்லவா? அந்த இடத்தில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். நில வாசல் படியில் தீபம் ஏற்றுபவர்கள் கட்டாயம் நில வாசலுக்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

- Advertisement -

நிலவாசல் படியில் தீபம் ஏற்றும் பொழுது தீபத்திற்கு முன்பு மலரை வைக்க வேண்டும். ஒரே ஒரு மலரை வைத்தாவது தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். மஞ்சள், குங்குமம் வைக்காமல், மலரும் வைக்காமல் தீபம் ஏற்றுவதில் பலன் இல்லை. இதற்கு அந்த இடத்தில் தீபம் ஏற்றமலேயே இருக்கலாம்.

deepam

நிலவாசல் படியில் தீபமேற்ற விரும்புபவர்கள் அகல் விளக்கை பயன்படுத்துவது மிகவும் நல்லது. தினந்தோறும் நிலவாசல் படியில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வர வீட்டில் சகல செல்வங்களும் வந்து சேரும். பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை எப்பொழுதும் ஏற்றி வைக்க வேண்டும். அது போல் நிலை வாசல் படியில் தீபத்தை ஏற்றும் பொழுது அந்த இடத்தில் ஒரே ஒரு கம்ப்யூட்டர் சாம்பிராணி அல்லது ஊதுபத்தி பொறுத்தி வைப்பது இன்னும் கூடுதல் பலனை கொடுக்கும். வாசலில் இருந்து தான் மகாலட்சுமி வீட்டிற்குள் வருகிறாள். எனவே வாசலிலேயே அவர்களை வரவேற்க இது போல் செய்வதால் வந்த மகாலட்சுமி மனம் மகிழ்ந்து நிரந்தரமாக அந்த வீட்டிற்குள் தாங்குவாள் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
உங்க நகத்தில் இது இருக்கான்னு பாருங்க! சீக்கிரமே இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். மூட நம்பிக்கையும், அதில் ஒளிந்துள்ள அதிர்ஷ்ட யோகங்களும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.