- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிதி மாற போவதன் அறிகுறிகள்

விதி மாற போவதன் அறிகுறிகள்

- Advertisement -

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் விதிப்படி ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்று என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. எழுதப்பட்ட விதியை மாற்றுவது என்பது இயலாதது. விதியை மதியால் வெல்லலாம் ஆனால் அம்மதியும் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. நம் விதி மாறப் போகிறது, இனி நம் தலையெழுத்து சரியாகிவிடும் என்று நீங்கள் எந்த சமயத்தில் நம்ப வேண்டும் தெரியுமா? விதி மாறும் பொழுது ஏற்படக்கூடிய அறிகுறிகள் என்னென்ன? என்பது போன்ற சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

ஏற்கனவே எழுதப்பட்ட நம் தலை எழுத்தை விதிப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்தடுத்து இப்படித்தான் நம் வாழ்க்கையில் நடக்கும் என்பது தீர்மானமான ஒன்று. நம் மதியை பயன்படுத்தி, சரியான திசையில் சென்றால் மட்டுமே ஒழிய, விதியை மாற்றுவது என்பது வெறும் கற்பனையே! நம் மனம் நாம் விரும்புவதை, நாம் ஆசைப்பட்டதை நமக்கு செய்ய சொல்லி தூண்டும். ஆனால் நம் மூளையோ நமக்கு எது சரி? எது தவறு? என்று பிரித்து பகுத்தறிவோடு மனிதனாக மாற்ற வழியை காண்பிக்கும். ஆனால் மூளை சொல்வதை விட, மனம் விரும்புவதை தான் நாம் ஏற்றுக் கொள்வோம், இதையே கர்மா என்கிறோம்.

- Advertisement -

நம் முன்னோர்களின் கர்ம விதி முடிவடைந்து, நம் தாய், தந்தையரின் மூலம் வரக்கூடிய கர்மங்கள் கழிந்து, இனிமேல் நம் தலையெழுத்து சந்தோஷமாக இருக்கப் போகிறது, நாம் நினைத்தபடி மாறப்போகிறது என்பதை நம் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்று சாஸ்திரங்கள் சூட்சமமாக குறிப்பிடுகிறது. உங்கள் விதி மாற காத்திருக்கும் பொழுது, நீங்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பீர்கள். மற்றவரிடம் அதிகமாக பேச விரும்பவும் மாட்டீர்கள்.

உங்களிடம் இருக்கும் தவறான சில கெட்ட பழக்கங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். முன்பை விட ஆரோக்கியத்தில், கூடுதல் கவனம் செலுத்த துவங்குவீர்கள். உங்களுடைய சரீரம் மற்றும் ஆன்மா இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும். கெட்ட சகவாசங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்களுடன் இருக்கும் கெட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டு நீங்கி வருவீர்கள்.

- Advertisement -

விலை உயர்ந்த பொருட்கள் உங்களைத் தேடி வரும். நீங்கள் விரும்பிய பொருட்கள் அனைத்தும், உங்கள் விருப்பம் போல் கிடைக்கும். ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பீர்கள். காலம் அதற்கான சந்தர்ப்பத்தையும், உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் முனைப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தின் மீது அதிக கவனமும் செலுத்துவீர்கள். இதெல்லாம் உங்களுக்கு நடக்க துவங்கி விட்டால், உங்கள் முன்னோர்கள் மற்றும் தாய், தந்தையரால் ஏற்படக்கூடிய கர்ம வினை முடிவடைகிறது. இனி உங்களுடைய கர்மமானது தொடங்குகிறது.

இதையும் படிக்கலாமே:
மகா சிவராத்திரியில் யோகம் பெரும் ராசிகள்

இதுவரை மாற்றம் காணாத உங்கள் விதி அல்லது தலையெழுத்து இனி மாறப் போகிறது. இப்படியே நம் வாழ்க்கை இருந்து விடுமா? என்கிற விரக்தியிலிருந்து மீண்டு, இனி உங்கள் வாழ்க்கை மாறப் போகிறது என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். இறைவனை சரணடையுங்கள். ஆன்மீக வழியில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள். இந்த சமயத்தில் இஷ்ட தெய்வத்தை சரணடைந்தால், நடப்பவை எல்லாம் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும், கவலைப்படாதீர்கள்.

சற்று முன்