- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலக பரிகாரம்

வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலக பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் நல்ல விதத்தில் முன்னேற வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால் நம்முடைய முன்னேற்றத்திற்குரிய வளர்ச்சியை ஒரு சிலர் பார்த்து வியந்து பொறாமை கொண்டு நாம் வாழக்கூடாது என்றோ அல்லது நம்முடைய முன்னேற்றத்தில் தடைகள் உண்டாக வேண்டும் என்றோ எதிர்மறை ஆற்றல்களை நம் மீது ஏவி விடுவார்கள். இப்படிப்பட்ட கெட்ட சக்திகள் நம் வீட்டிற்கு வந்துவிட்டால் வீட்டில் அடிக்கடி மனவருத்தம், உடல் நல கோளாறு, சண்டை சச்சரவுகள் போன்றவை ஏற்படுவதோடு நாம் தொட்ட காரியங்கள் எதிலும் வெற்றியை பெற முடியாமல் மன நிம்மதியற்று இருப்போம். அப்படி ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அந்த பாதிப்புகளில் இருந்து விலக மட்டை தேங்காயை வைத்து செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கெட்ட சக்திகள் விலக பரிகாரம்

சிவபெருமானின் அம்சம் கொண்ட ஒரு பொருளாக தான் தேங்காய் திகழ்கிறது. அதிலும் கோவில் கும்பாபிஷேகம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் கலசம் வைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தேங்காயாக தான் மட்டை தேங்காய் திகழ்கிறது. இந்த மட்டை தேங்காயை பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும் சிறந்த பலனை தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் விலகிச் செல்வதற்கு மட்டை தேங்காயை வைத்து செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை செய்வதற்கு ஒரே ஒரு மட்டை தேங்காய் இருந்தால் போதும். இந்த மட்டை தேங்காயை முதலில் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தனம் குங்குமம் பன்னீர் இவை மூன்றையும் நன்றாக குலைத்து அதை மட்டை தேங்காயில் ஒரு இடம் கூட விடாமல் அனைத்து இடத்திலும் பூச வேண்டும். இவ்வாறு பூசி முடித்த பிறகு மட்டை தேங்காயின் மேல் பச்சை கற்பூரத்தை நன்றாக நுணுக்கி தூவி விடுங்கள். இதை நிழலில் நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். காய வைத்த இந்த மட்டை தேங்காயில் வெள்ளெருக்கு நார் என்று நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அந்த நாரை வாங்கி வந்து நன்றாக சுற்றி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நம்முடைய வீட்டு குல தெய்வத்தின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும்.

தினமும் காலையில் தீபம் ஏற்றி இந்த மட்டை தேங்காய்க்கும் ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டி வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும், தீய சக்திகளும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் மட்டை தேங்காயை வழிபாடு செய்ய வேண்டும். 48 நாட்கள் நிறைவடைந்த பிறகு வரக்கூடிய முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தேங்காயை கடலில் கொண்டு போய் போட வேண்டும். அருகில் கடல் இல்லை என்பவர்கள் ஆறுகளில் போடலாம். வேறு எதிலும் போடக்கூடாது. இப்படி மூன்று முறை மட்டை தேங்காயை வைத்து 48 நாட்கள் வழிபாடு செய்து கடலில் போடுவதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் அதன் பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு

ஒரே ஒரு மட்டை தேங்காயை வைத்து முழு நம்பிக்கையோடு குலதெய்வத்தை நினைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேற்பட்ட கெட்ட சக்தியும் விலகிச் செல்லும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்