- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டி அடிக்க

வீட்டில் இருக்கும் தீய சக்தியை விரட்டி அடிக்க

- Advertisement -

நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்பட்டு நாம் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள் தங்களால் எப்படி எல்லாம் கஷ்டத்தை தர முடியுமோ அப்படி எல்லாம் கஷ்டத்தை நமக்கு தருவார்கள். அவர்கள் தான் தருகிறார்கள் என்று கூட நமக்கு தெரியாமல் அவர்களிடமே சகஜமாக பேசி பழகுவோம். இப்படி அவர்கள் செய்யக்கூடிய கஷ்டங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை தாண்டிய பிறகு தீய சக்திகளால் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு கூட சென்று விடும். அப்படிப்பட்ட தீய சக்திகளால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கவும் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்தியை விரட்டி அடிக்கவும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தீய சக்தியை விரட்டி அடிக்க

எப்பேர்பட்ட தீய சக்தியாக இருந்தாலும், ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற எதுவாக இருந்தாலும் அதனால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நாம் உணர்ந்தால் இந்த பரிகாரத்தை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக மூன்று முறை நாம் செய்து விட்டோம் என்றால் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகி ஓடும். பிறகு என்ன நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைத்துவிடும் அல்லவா? அப்படிப்பட்ட பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் மஞ்சளை தடவி காயவைத்து தங்களால் இயன்ற ஏதாவது ஒரு காணிக்கையை வைத்து முடிந்து உங்கள் குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அவ்வாறு வைக்கும் பொழுது தீய சக்திகள் வீட்டிலிருந்து விலகியதும் இந்த காணிக்கையை உண்டியலில் சேர்த்து விடுகிறேன் என்று வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் நாம் செய்யக்கூடிய பரிகாரம் நமக்கு வெற்றிகரமாக அமையும்.

இப்பொழுது கடைக்கு சென்று 27 எலுமிச்சம் பழங்களை வாங்கி வர வேண்டும். இந்த எலுமிச்சம் பழங்களை இரண்டாக நறுக்கி அதன் சாறை பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தண்ணீர் கலந்து வீட்டு முழுவதும் தெளிக்க வேண்டும். அதேபோல் வீட்டிற்கு வெளியில் அதாவது வீட்டை சுற்றியும் தெளிக்க வேண்டும். எலுமிச்ச சாறு பிழிந்த பிறகு மீதம் இருக்கும் எலுமிச்சம் தோலை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அமாவாசை வரக்கூடிய நாளில் இந்த எலுமிச்சம் பழத்தோலுடன் 27 அரச குச்சிகளை வைத்து பச்சை கற்பூரத்தை போட்டு நன்றாக எரித்து சாம்பலாக்கி கொள்ளுங்கள். இந்த சாம்பலை தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் வீட்டை சுற்றியும் தெளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக மூன்று அமாவாசைகள் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் தீய சக்தியால் ஏற்பட்ட தோஷமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: ஆடி மாதம் கூற வேண்டிய மந்திரம்

குலதெய்வத்தை முழுமனதோடு நினைத்துக் கொண்டு இந்த ஒரு பரிகாரத்தை செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளால் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்