விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

Vivekanandhar

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனான இவர் வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். தனது இளம் வயதிலேயே அனைத்து விடயங்ளையும் ஆராய்ந்து அறிந்து முன்னோக்கு சிந்தனையுடன் செயல்பட்ட இந்த சுவாமி விவேகானந்தரை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம். அவரை பற்றிய முழு வரலாற்றினை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தெளிவாக படியுங்கள்.

vivekanandar-1

விவேகானந்தர் பிறப்பு :

சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் விசுவநாத் தத்தா மற்றும் புவனேஷ்வரி தேவி என்று தம்பதியினருக்கு 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. காலப்போக்கில் இறையுணர்வின் மீது இருந்த ஈடுபாட்டால் அவரது பெயரினை விவேகானந்தர் என்று மாற்றிக்கொண்டார்.

இயற்பெயர் – நரேந்திரநாத் தத்தா
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜனவரி 12, 1863
பெற்றோர் – விசுவநாத் தத்தா, புவனேஷ்வரி தேவி
பிறந்த ஊர் – கல்கத்தா, மேற்குவங்காளம்
மருவிய பெயர் – விவேகானந்தர்

படிப்பு மற்றும் கல்வி :

தனது தொடக்க கல்வியினை அவர் பயிலும் போது அவர் மிகச்சிறந்த நினைவாற்றலோடு இருந்துள்ளார். மேலும் இசை மற்றும் இசைக்கருவிகள் மேல் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் அதனை முறைப்படி கற்றார். சிறுவயதிலிருந்து அவருக்கு தியானத்தின் மீது அதிக நாட்டம் இருந்தது. எனவே அவர் தியானத்தினை தொடர்ந்து செய்துவந்தார்.

- Advertisement -

தனது பள்ளிப்படிப்பினை முடித்த விவேகானந்தர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அந்த சமயத்தில் அனைத்து மேற்கத்திய தத்துவங்களையும் அவர் முழுவதுமாக படித்தார். மேலும் மேற்கத்திய காலாச்சாரியம் மற்றும் அவர்களுடைய வரலாறு ஆகியவற்றினையும் முழுமையாக அறிந்துகொண்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருடன் விவேகானந்தர் :

கல்லூரியில் தத்துவ படிப்பினை தேர்ந்தெடுத்து படித்ததனால் அவருக்கு அனைத்து விடயங்களில் மீதும் சந்தேகம் வந்தது குறிப்பாக ஆன்மிகம், கடவுள் மற்றும் கடவுள் வழிபடு போன்ற விடயங்களில் அவருக்கு ஒரு தெளிவில்லா நிலை உண்டானது. மேலும் எதனையும் ஆராய்ந்த பின்னர் அதில் உண்மை இருந்தால் மட்டுமே அதனை நம்பும் பழக்கத்தினை கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் தான் காளி கோவிலில் பூசாரியாக இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சருடன் அவருக்கு சந்திப்பு ஏற்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை நேரில் பார்த்தவர் என்று விவேகானந்தரின் நண்பர்கள் அவரிடம் கூற அதுபற்றி முழு விடயத்தினையும் தெரிந்து கொள்ள முதன்முறையாக ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்க விவேகானந்தர் சென்றார்.

Swami Vivekananda

விவேகானந்தர் பரமஹம்சரிடம் கடவுளை நீங்கள் நேரில் கண்டுளீர்களா? என்று தனது கேள்வியினை அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பரமஹம்சர் நான் உன்னை பார்ப்பதை விட தெளிவாக கடவுளை பார்த்துள்ளேன் என்று கூறினார். அதனை விவேகானந்தர் நம்ப வில்லை பிறகு ஒரு சோதனையை செய்த விவேகானந்தர் அதன் பின் ராமகிருஷ்ண பரமஹம்சரை நம்ப தொடங்கினார்.

சீடன் விவேகானந்தர் :

பரமஹம்சரை முழுவதும் நம்ப தொடங்கிய பின்னர் விவேகானந்தர் அவருடைய சீடராக மாறினார். ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுள் வழிபாட்டினை உருவ வடிவமாகவும் மற்றும் அறுவை வடிவமாகவும் போதிக்காமல் உணர்ச்சி வடிவமாக போதித்தார். இதன் காரணமாக கடவுள் பக்தி மற்றும் ஞான மார்க்கம் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டார்.

vivekanandar-3

துறவியான விவேகானந்தர் :

விவேகானந்தர் தனது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்ததும் விவேகானந்தர் மற்றும் சில முதன்மை சீடர்களும் துறவிகளாக மாறினார் . துறவியாக மாறிய இவர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் சென்று அங்கு தங்களது ஞான அறிவினை விசாலப்படுத்தி கொண்டனர். அப்போது இந்திய மக்களின் நிலையினை பற்றி விவேகானந்தர் நன்கு புரிந்துகொண்டார்.

நாடு முழுவதும் வெவ்வேறு மக்களை சந்தித்து அவர்களை பற்றி தெரிந்து கொண்ட விவேகானந்தர் மக்கள் ஆங்கிலேயே அரசிடம் அடிமைப்பட்டு இருப்பதனை நினைத்து வருந்தினார். மேலும் அவர் அதற்கு அடுத்து நடத்திய சொற்பொழிவுகள் மக்களின் முன்னேற்றத்திற்கான சொற்பொழிவுகளாகவே இருந்தது.

Swami Vivekananda

கன்னியாகுமரியில் விவேகானந்தர் :

இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் அவர் தங்கி சில காலம் தியானம் செய்தார். கடல் நடுவே ஒரு பாறையின் மீது அமர்ந்து அவர் தியானம் செய்தார். அந்த இடத்தில் அவரது நியாபகமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டது . இன்றளவும் அது மக்களின் பார்வைக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிகாகோ உலக மாநாட்டில் சொற்பொழிவு :

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1893ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற விவேகானந்தர் அவர் ஆற்றிய உரையின் மதிப்பினை உணர்ந்த பலர் அவருக்கு சீடர்களாக மாறினார். மேலும் 4 ஆண்டுகள் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் உலகம் முழுவதும் விவேகானந்தா மிஷன் மற்றும் விவேகானந்தா மடம் என்று நிறுவி தனது கருத்துக்களை போதித்து வருகிறார்.

vivekanandar-2

இந்தியாவில் விவேகானந்தா மடம் மற்றும் மிஷன் :

பல நாடுகளில் தனது ஆன்மீக பயணத்தினை மேற்கொண்ட விவேகானந்தர் மீண்டும் இந்தியா வந்து நாடு முழுவதும் தனது மடங்களின் மூலம் சொற்பொபிழிவு மற்றும் தனது விலைமதிப்பில்லா கருத்துக்களை கூறி மக்களின் வாழ்வு மேம்பாட்டு இருக்க தனது உதவினை மக்களுக்கு புரிந்தார்.

விவேகானந்தர் இறப்பு :

இந்தியாவிலும் தனது மடங்களை நிறுவிய அவர் தனது சொந்த ஊரான கல்கத்தாவில் பேலூர் எனும் இடத்தில் தனது மடத்தினை நிறுவினார். பிறகு அவர் 1902ஆம் ஆண்டு ஜூலை 4 நாள் இறந்தார்.

விவேகானந்தர் இறப்பு குறித்த மர்மங்கள்:

சுவாமி விவேகானந்தரின் இறப்பு குறித்த எண்ணற்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வருவதை நன்மால் பார்க்க முடிகிறது. அவர் கான்செர் நோயால் பாதிக்க பட்டு இணைந்தார், காமத்தை அடக்கியதால் இறந்தார், ஆஸ்துமா மற்றும் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இப்படி ஆளுக்கு ஒருவர் ஒரு கதையை பரப்பி விடுகிறார்கள். ஆனால் அவர் உண்மையில் எப்படி இறந்தார் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

Swami Vivekananda

1863 ஆண்டு கல்கத்தாவில் பிறந்த விவேகானந்தர், சரியாக தனது 39 வயதில், 1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி இறக்கிறார். இறக்கும் சமயத்தில் விவேகானந்தருக்கு ஆஸ்துமா சக்கரை போன்ற நோய்கள் இருந்ததாகவும் ஆனால் அவரின் உயிரை பறிக்கும் அளவிற்கு அந்நோய்களின் வீரியம் இல்லை என்றும் அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக ஞாயணிகள், யோகிகள் பின்றோர் தங்களது இறப்பை முன்கூட்டியே அறிவித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அதே போல தான் சுவாமி விவேகானதரும் தனது இறப்பு குறித்த தகவளை தான் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பே சுவாமி ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவரார சுவாமி அபேனந்தாவிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுவாமி அபேதானந்தா நீங்கள் இறப்பு குறித்தெல்லாம் இப்போது நினைக்கவே கூடாது. அதற்கான வயதும் இதுவல்ல என்று கூறியுள்ளார். உடனே விவேகாந்தர் கூறியுள்ளார், நாளுக்கு நாள் என்னுடைய ஆன்மா பெரியதாகிக்கொண்டே போகிறது. ஒருகட்டத்திற்கு மேல் என்னுடைய ஆன்மா இந்த உடலில் இருப்பது கடினம். ஆகையால் நான் இன்னும் சில வருடங்களிலேயே இறந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Swami Vivekananda

அவர் இறந்த அந்த நாளில், எப்போதும் போல அவர் காலையில் எழுந்து, பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று தியானம் செய்த்துள்ளார். அதன் பிறகு மாலை 7 மணி அளவில் தன்னுடைய அறைக்குள் சென்ற அவர், தன்னை யாரும் தொந்தரவு செய்யாதபடி பார்த்துக்கொள்ளுமாறு தன்னுடைய சீடர்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு ஆழ்ந்த தியானத்திற்கு சென்ற அவர், இரவு 9 மணி அளவில் தன்னுடைய உடலில் உள்ள ஏழு சக்கரங்களில் உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தை உடைத்து தன்னுடைய உயிரை தானே வெளியேற்றி முக்தி அடைந்துள்ளார்.

பழங்காலத்தில் யோகிகள் தங்களின் உயிரை தியானம் மூலம் வெளியேற்றுவர் என்று கூறப்பட்டிருந்தாலும், அதை நிகழ்காலத்தில் சாதித்து காட்டியவர் விவேகானந்தரே. அவரின் இறப்பிற்கு பிறகு அவருடைய உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவரின் மூளை நரம்புகள் வெடித்து அவர் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனால் தன்னுடைய மூளை நரம்புகளை தானே வெடிக்க செய்ய இயலாது என்றும், கடுமையான தியானத்தை மேற்கொள்ளும் ஒருவரால் மட்டுமே சஹஸ்ரார சக்கரத்தை உடைத்து இது போன்ற செயல்களை செய்ய இயலும் என்றும் விவேகாடநதரின் சீடர்கள் கூறுகின்றனர்.

Swami Vivekananda

இந்தியாவின் மிக சிறந்த ஞாயணிகளில் ஒருவரான விவேகானந்தரின் இறப்பு இப்படி தன் இருந்ததே தவிர, அவர் நோயினால் பாதிக்கப்பட்டோ அல்லது காமத்தை காட்டுபுதியதாலோ இருக்கவில்லை என்பதே உண்மை.

வீடியோ பதிவு:

English Overview:
Here we have Swami Vivekananda biography in Tamil. Swami Vivekananda is a great Rishi who lived in India.  Above we have Swami Vivekananda history in Tamil. We can also say it as Swami Vivekananda varalaru in Tamil or Swami Vivekanandar essay in Tamil or Swami Vivekanandar Katturai in Tamil.

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்