தொழில், வியாபாரம் செய்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய திருஷ்டி பரிகாரம் இது தான்!

puthan-viyabaram-shop
- Advertisement -

தொழில், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய எந்த ஒரு ஸ்தாபனமாக இருந்தாலும் அந்த இடத்தில் அடுத்தவர்களின் பார்வை பட்டு அல்லது பலபேரது கால்கள் பட்டு அது திருஷ்டியாக மாறி வருமானத்தில் பாதிப்பை உண்டாக்கும். நீங்கள் எவ்வளவு தான் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சி செய்தாலும், நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உங்களுக்கு வருமானம் இருக்காது. அது போன்றவர்கள் இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஓஹோ என்று வளரும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

puthan

தொழில் மற்றும் வியாபாரத்திற்கு நம்முடைய ஜாதகத்தில் காரணகர்த்தாவாக இருப்பது புத பகவான். ஆனால் புதன் பகவான் என்று ஒருவர் இருப்பதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. நவகிரகங்களில் புதன் பகவான் தான் நம்முடைய வருமானத்திற்கு அதிபதி. அவரை வணங்கினால் தான் எந்த ஒரு தொழிலிலும், வியாபாரமும் செழித்து வளரும் என்பதை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு வீட்டில் நிறைய பேர் இருக்கிறீர்கள் என்றால் அதில் யாராவது ஒருவருக்கு நல்ல பலன்கள் தரக்கூடிய கிரக அமைப்பு இருக்கும். எப்பொழுதும் ஒரு தொழில், வியாபாரம் செய்ய காலையில் வீட்டை விட்டு நீங்கள் புறப்படும் பொழுது சாவிக்கொத்து எடுத்துக் கொண்டு செல்வீர்கள் அல்லவா? அதை கிரஹ அமைப்பு பலம் பெற்ற நபர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதன் பின் வீட்டை விட்டு வெளியேறுவது நல்லது.

key-saavi-kothu

முதலில் காலையில் குளித்து முடித்ததும், விக்னங்களை தீர்க்கும் விநாயகரை பூஜை அறையில் வணங்கி விபூதி இட்டுக் கொள்ள வேண்டும். இன்றைய தொழில் சிறக்க ஒரு நிமிடமாவது பிரார்த்தனை செய்து கொண்டு அதன் பின் சாவிக் கொத்தை பெற்றுக் கொண்டு வீட்டின் தலைவாசலை உங்களது இடது காலால் கடக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் கடை அல்லது தொழில் செய்யும் இடத்தை அடைந்தவுடன், கடையை திறந்ததும் முதலில் மஞ்சள் தண்ணீரை தலைவாசலில் தெளித்து விட வேண்டும். பலபேரது கால்கள் பட்ட இடம் திருஷ்டி நிறைந்த இடமாக தலைவாசலில் இருக்கும். அதனை மஞ்சள் தண்ணீர் தெளித்து திருஷ்டி தோஷம் கழிக்க வேண்டும். அதன் பின் கடையில் சிறு விநாயகர் படமாவது நிச்சயம் இருக்கும் அல்லவா? அவரை சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி, தீபமேற்றி இரண்டு நிமிடம் இன்றைய நாள் நன்றாக அமைய பிரார்த்திக்க வேண்டும்.

green pen

அதன்பின் புத பகவானுக்கு உரிய நிறமான பச்சை நிறத்தை பயன்படுத்தி முதலில் ஒரு வெள்ளைத்தாளில் பிள்ளையார் சுழி போட்டுக் கொள்ள வேண்டும். புத பகவானுக்கு ஐந்தாம் இடம் என்பதால் முதல் வார்த்தையாக அந்த தாளில் 5 என்று எழுதிக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய தொழில் அல்லது வியாபாரம் நீங்கள் வழக்கம் போல் துவங்கலாம். இது போல் செய்தால் திருஷ்டி நீங்கி, புத பகவானின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

புத பகவானை மகிழ்வித்தால் தொழில், வியாபாரம், உத்தியோகம் என்று வருமானம் ஈட்டக்கூடிய அனைத்து விஷயங்களும் நமக்கு சாதகமாக அமையும். இதற்கு சிறிய பரிகாரம் ஒன்று கூட செய்யலாம். ஒரு பச்சை வண்ண துணியில் இரண்டு பச்சை கற்பூரம், இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் இவைகளைப் போட்டு சிறிய முடிப்பாக முடிந்து, வெள்ளை நூலால் கட்டி நீங்கள் பணம் வைக்கும் கல்லாப்பெட்டியில் வைத்து விடுங்கள். புதன்கிழமை அன்று இதை செய்வது விசேஷமானது.

puthan

மறுநாள் காலையில் அந்தத் துணியில் இருக்கும் பொருட்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். நீங்கள் மஞ்சள் தண்ணீரை தெளித்த பின் இந்த தண்ணீரை கடை முழுவதும் தெளித்து விடுங்கள். மீண்டும் அந்தத் துணியில் வேறு பொருட்களை வைத்து அதே போல் புதிதாக கல்லா பெட்டியில் வைத்து விடுங்கள்.

kirambu-elam-pachaikarporam

பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் போன்றவை பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. இவ்வாறு செய்வதால் தொழில் நடக்கும் இடங்களில் செல்வ வளம் கொழிக்கும் என்பார்கள். கடையில் இருக்கும் திருஷ்டி நீங்கி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை நீங்களே கண்கூடாக இந்த பரிகாரத்தை செய்து வருவதால் நிச்சயம் காண முடியும். பல வருடமாக தொழில், வியாபாரம் செய்பவர்கள் இதை கட்டாயம் செய்வார்கள் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய ஜாதகத்தில் சந்திரனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருக்கிறது என்பதை பாருங்கள்! அதனால் கிடைக்கும் பலன்கள் தெரிந்தால் வியந்து போவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -