நீங்கள் செய்யும் தொழில் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தால், சரியான லாபத்தை கொடுக்கவில்லை என்றால், நீங்கள் கடை வைத்திருந்து அந்த கடையில் சரியான முறையில் வியாபாரம் நடக்கவில்லை என்றால், என்ன செய்ய வேண்டும். மிக மிக சுலபமான முறையில் வியாபாரம் வசியமாக, ஒரு வழிபாட்டு பரிகார முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய தொழில் நல்ல லாபத்தை கொடுக்கின்றது என்றாலும், உங்களுடைய கடையில் நல்ல வியாபாரம் நடக்கிறது, பண வசியம், தன வசியம் இருக்கிறது என்றாலும் உங்களுடைய தொழிலை விரிவுபடுத்தவும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

ஏலக்காய் 2, கிராம்பு 2, பட்டை 2 துண்டு, பச்சைக் கற்பூரம் சிறிய துண்டு, மாசிக்காய் 1, இந்த எல்லா பொருட்களையும் ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் போட்டு தொழில் செய்யும் இடத்தில் சுவாமி படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள். எப்போதும்போல தொழில் செய்யும் இடத்தில் விளக்கு வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.
தினமும் தீபம் ஏற்றும் போது இந்த ஒரு வரி மந்திரத்தை மனதார உச்சரித்துக்கொண்டே தீபத்தை ஏற்றுங்கள். ‘ஓம் ஸ்ரீம் அம் அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி’. தீபத்தை ஏற்றி முடித்துவிட்டு உங்கள் மனதார ‘உங்களுடைய தொழில் லாபத்தில் செல்கிறது. உங்களுடைய கடைக்கு வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள், நிறைய பொருட்கள் விற்பனையாகின்றது. நிறைய லாபம் கிடைப்பதாக, நேர்மறையாக நினைத்துக்கொண்டு’ குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன்பின்பு தொழிலை தொடங்குங்கள்.

நிச்சயமாக தீபத்தை ஏற்றி முடித்துவிட்டு நேர்மறையாக தான் நினைக்க வேண்டும். தவிர ‘என்னுடைய கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை. தொழிலில் நஷ்டம் ஆகவே உள்ளது. கஷ்டம் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. கையில் காசு இல்லை’. என்ற வார்த்தைகளை ஒருபோதும் தொழில் செய்யும் இடத்தில் மனதில் கூட நினைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். (பாட்டிலில் போட்டு வைத்திருக்கும் பொருட்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும்.)
தினமும் இதே போல் தீபமேற்றி குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு வர, நிச்சயமாக உங்களுடைய தொழிலில் படிப்படியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். கைநிறைய லாபத்தை சம்பாதிப்பீர்கள். மனநிறைவோடு உங்களுடைய தொழிலை செய்வீர்கள்.

இதேபோல் உங்களுடைய வீட்டிலும் இந்த மந்திரத்தை உச்சரித்து தீபம் ஏற்றலாம். வீட்டில் ஏதேனும் பணத்திற்கு கஷ்டம் இருந்தால், கடன் பிரச்சனை இருந்தால் அந்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக, உங்களுக்கு நிறைய வருமானம் கிடைப்பதாக நேர்மறையான எண்ணத்தோடு மேல் சொன்ன முறைப்படி இந்த தீபத்தை ஏற்றிவர வீட்டில் இருக்கும் கஷ்டங்களும் படிப்படியாக குறையும். அஷ்ட ஐஸ்வரியங்களும் உங்களை வந்து அடையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.