வியர்வை வாடை போக இன்னுமா சோப்பு போட்டு குளிக்கிறீங்க. இது வரைக்கும் இந்த டிப்ஸ் பாலோ பண்ணலைனா உடனே ட்ரை பண்ணுங்க. இந்த சம்மரில் நாள் முழுவதும் பிரஷ்ஷாக இருக்க சூப்பர் ஐடியா.

- Advertisement -

உடலில் வியர்வை நாற்றம் வீசுவது என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடியது தான். ஆனால் ஒரு சிலருக்கு இந்த வாடை அதிகப்படியாக வீசி அருகில் இருப்பவரை கூட முகம் சுளிக்க வைத்து விடும். இப்படியானவர்கள் பொது வெளியில் மற்றவர்களுடன் சகஜமாக இருக்கவே கூச்சப்படுவார்கள். இந்த வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசுவதற்கு நம் உடம்பில் சுரக்கும் ஒரு வகையான சுரப்பிகள் தான் காரணம். இது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சரி இப்போது இது போல வியர்வை வாடை அதிகமாக வரும் போது அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்த தகவலை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடலில் வேர்வை துர்நாற்றம் வீசாமல் இருக்க முதலில் தினமும் இரண்டு முறை குளிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அது மட்டும் இன்றி தளர்வான ஆடைகளையும் இந்த வெயில் காலத்தில் பருத்தியினாலான ஆடைகளையும் உடுத்துவதை பழக்கப்படுத்திக் கொண்டால் இந்த வேர்வை சுரப்பது ஓரளவுக்கு கட்டுப்படும். நம்மை சுத்தமாக பராமரித்து கொள்வது தான் இந்த வேர்வை வாடையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான முதல் சிறந்த வழி.

- Advertisement -

அடுத்து குளிக்கும் தண்ணீர் எப்போதும் சிறிதளவு எலுமிச்சை சாறு, கல் உப்பும் சேர்த்து குளிக்கும் போது வியர்வை வாடை வீசாமல் இருக்கும். இதை விட சிறிதளவு படிகார கல்லை குளிக்கும் தண்ணீரில் போட்ட பிறகு குளித்தால் வேர்வை வாடை வீசுவது பெரும் அளவு கட்டுப்படும். இத்துடன் இந்த ஒரு ஐடியாவையும் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உடலில் வேர்வை வாடை வராமல் இருப்பதோடு உடல் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் ஜவ்வாது இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். வெட்டி வேரை சிறிதளவு எடுத்து கொஞ்சமாக நறுக்கி ஒரு சிறிய வட்ட வடிவில் சுருட்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டில் இருக்கும் நூல் ஏதேனும் ஒன்றை எடுத்து அதை சுற்றி விட்டால் போதும் நாம் உடலில் தேய்த்து குளிக்கும் நார் போல நமக்கு கிடைத்து விடும். இதை வைத்து உடல் முழுவதும் நன்றாக தேய்த்துக் குளித்தாலே போதும் வேர்வை முற்றிலுமாக தடுப்பதுடன், உடலுக்கு குளிர்ச்சியும் தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

- Advertisement -

இது போல நூல் வைத்து கட்ட முடியாதவர்கள் இப்போதெல்லாம் இந்த பழங்கள் காய்கறிகள் வளை போன்ற பையில் கொடுப்பார்கள். அதில் போட்டு இறுக்கக் கட்டி கொள்ளலாம். இது எதையுமே செய்ய முடியாது என்பவர்கள் வெட்டிவேரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்ட பிறகு குளித்தால் இன்னும் சிறந்ததாக இருக்கும். இதை நார் போல செய்த பிறகு தேய்த்து குளிக்கும் போது சோப்பு போட வேண்டிய அவசியம் இருக்காது.

இப்படி குளித்த பிறகு உடல் முழுவதும் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் துடைத்து விட்டு அதன் பிறகு வாங்கி வைத்திருக்கும் ஜவ்வாதிலிருந்து ஒரே ஒரு பின்ச் மட்டும் எடுத்து தண்ணீர் ஊற்றி குழைத்து ஆடையின் மீது தேய்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது வீசும் நறுமணத்தை அப்போது நீங்களே உணர்வீர்கள். இது காலையில் முதல் இரவு வரை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

இதையும் படிக்கலாமே: உடல் சூட்டை குறைத்து முடி உதிர்வதை தடுக்க, இப்படி ஒரு பொருள் இருப்பதை இத்தனை நாட்களாக மறந்து விட்டோமே. பாட்டி சொன்னதை இப்போதாவது ஞாபகப்படுத்தி பார்ப்போம்.

உடலில் வடியும் வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள இதை விட அருமையான வழி இருக்க வாய்ப்பே இல்லை. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -