இந்த 3 பொருட்களை உங்கள் கையில் தொட்டாலே போதும். முடங்கிப்போன தொழிலை கூட 3 வாரங்களில் முன்னுக்கு கொண்டுவந்து, கோடி கோடியாக லாபத்தை சம்பாதித்து விடலாம்.

cash-pattai

சொந்தத் தொழில் செய்து அதில் குறைந்த நாட்களில் அதிகப்படியான லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும். சொந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, அலுவலக பணியாக இருந்தாலும் சரி, எந்த ஒரு வேலையில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றாலும், லாபம் அதிகமாக கிடைக்க வேண்டும் என்றாலும் முதலில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தான் மூலதனமாக செய்ய வேண்டும். அதன் பின்பு நாம் செய்யும் செயல்கள் வெற்றியில் முடிகின்றதா தோல்வியில் முடிகின்றதா என்பது அடுத்த கட்டம். எதிலும் கஷ்டப்படக் கூடாது, ஆனால் காசு பணம் கையில் வந்து கொட்ட வேண்டும் என்று நாம் நினைத்தால், அது நமக்கு வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான நஷ்டத்தை தான் கொண்டு வந்து தரும்.

kadan

பலமுறை முயற்சி செய்தும் தோல்விகளை கண்டு நீங்கள் துவண்டு போயிருந்தால், உங்களுடைய முயற்சிகளுக்கு ஊன்றுகோலாக இந்த பரிகாரத்தை செய்து பயனடையலாம். முயற்சியே செய்யாமல் சும்மாவே இருந்து கொண்டு பரிகாரத்தை செய்து விட்டு பலனை எதிர் பார்த்தால் நிச்சயமாக பலன் கிடைக்காது என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும்.

நீங்கள் செய்யும் தொழில் சரியான லாபத்தை பெற்று, நல்ல முன்னேற்றத்தை சீராக பெற வேண்டுமென்றால் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் விலகி, கண் திருஷ்டி விலகி, உங்களை பிடித்த பீடை விலகி உங்களை தேடி மகாலட்சுமி வர வேண்டும் என்றால், உங்களைத் தேடி அதிர்ஷ்டம் வரவேண்டும் என்றால், இந்த தாந்திரீக ரீதியான பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும்.

Kadugu

முதலில் இந்த இரண்டு பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். முதலாவது பொருள் மிளகு. இரண்டாவது பொருள் கருப்பு உளுந்து. இரண்டுமே கருப்பு நிறத்தில் தான் இருக்கும். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். கருப்பு உளுந்தில் இருந்து 2 ஸ்பூன், மிளகு 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டாலும் போதும்.

- Advertisement -

இந்த மிளகு உளுந்து சேர்ந்த கலவையை நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் நான்கு மூலைமுடுக்குகளில் தூவி விட வேண்டும். கொஞ்சமான அளவில் தூங்கி விட்டால் கூட போதும். ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த பரிகாரத்தை செய்து விட்டு, நீங்கள் தொழில் செய்யும் இடத்தை மூடிவிட்டு வீட்டுக்கு செல்லலாம்.  மறுநாள் காலை திங்கட்கிழமை இந்தப் பொருட்களையெல்லாம் துடைப்பத்தால் கூட்டி சுத்தம் செய்து கால் படாத இடங்களில் கொட்டி விடுங்கள். அந்த தொழில் செய்யும் நிறுவனத்தின், உரிமையாளரே இந்த பரிகாரத்தை, அவரது கையால் செய்வது மிகவும் நல்லது.

karuppu ulunthu

மூன்றாவதாக ஒரு பொருளை நாம் பரிகாரத்திற்கு பயன்படுத்த போகின்றோம். அதுதான் பட்டைத்தூள். திங்கட்கிழமை காலை நீங்கள் தொழில் செய்யும் இடத்தை சுத்தம் செய்து விட்டு சிறிதளவு பட்டை தூளை எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, தொழில் செய்யும் இடத்தில் நில வாசல் படிக்கு வெளிப்பக்கம், நீங்கள் நின்று கொள்ளுங்கள். வாசலை உள்ளே பார்த்தவாறு நிற்க வேண்டும்.

pattai-thool

உள்ளங் கைகளில் வைத்திருக்கும் பட்டை தூளை நீங்கள் தொழில் செய்யும் இடத்திற்கு உள்பக்கம் பார்த்தவாறு அப்படியே உள்ளங்கையில் இருந்து ஊதி விடுங்கள். அந்தப் பட்டைத்தூள் நீங்கள் தொழில் செய்யும் இடத்தை நோக்கி உள்ளே பறந்து வரும். இந்த பட்டைத்தூள் வரும் பாதையில் மகாலட்சுமி தேவியும் வருமானமும் லாபமும் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் காற்றோடு காற்றாக கலந்து வரும் என்பதுதான் இந்த பரிகாரத்தின் நம்பிக்கை. இந்த பரிகாரங்களை தொழில் செய்யும் இடத்தில் மட்டும் அல்லாமல், நம்முடைய வீட்டில் செய்தாலும் நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.