யாரையும் எளிதில் நம்பாதவர்கள், நம்பி விழுந்தால் எழ முடியாத 4 ராசிகள் யாரெல்லாம் தெரியுமா? இவர்களுக்குள் இவ்வளவு இருக்கா?

sad-men-astro-wheel
- Advertisement -

ஒரு முறை விழுந்து விட்டால் மீண்டும் எழ முடியாத 4 ராசிக்காரர்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். எளிதில் எதையும் நம்பாத இவர்கள் ஒரு விஷயத்தில் முழுமையாக நம்பி இறங்கிவிட்டால், அது எதிர்பாராமல் தோல்வி அடைந்த பின் அதிலிருந்து மீண்டு எழ முடியாமல் தவிக்கும் ராசிக்காரர்களில் இந்த 4 ராசிக்காரர்கள் முதன்மையாக இருக்கின்றனர். மேலும் இதைப் பற்றிய தகவல்களை அறிய இந்த பதிவை பின் தொடர்வோம்.

உதாரணத்திற்கு ஒருவரை எளிதாக இவர்கள் நம்பி விட மாட்டார்கள். அப்படி ஒருமுறை இவர்கள் ஒருவரை நம்பி விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். இதனால் இவர்கள் பல இடங்களில் அவதிப்படுவது உண்டு. எதையும் முழுமையாக நம்பாமல், சந்தேகிக்காமல் இவர்கள் ஒரு செயலில் இறங்குவது இல்லை. அப்படி நம்பி இறங்கும் விஷயம் தோல்வி அடைந்து விட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இவர்களுக்கு மற்றவர்களை விட அதிக காலம் எடுக்கும். அத்தகு ராசிக்காரர்கள் யாரெல்லாம்?

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்களை தனித்துவமாக கருதுபவர்கள் ஆக இருக்கின்றனர். தங்களை விட எவரையும் எளிதாக இவர்கள் நம்புவதில்லை. எதற்கெடுத்தாலும் ஒரு சந்தேகம், எதற்கெடுத்தாலும் ஒரு பயம் என்று இவர்களிடம் எப்பொழுதும் எச்சரிக்கை உணர்வு அதிகரித்து காணப்படும். அப்படி இருக்கும் இவர்கள் ஒருவரை முழுதாக நம்பி விட்டால் அல்லது ஒரு விஷயத்தில் வெற்றி கிடைக்கும் என்று இறங்கிவிட்டால் அதில் இருந்து பின் வாங்குவதில்லை. வெற்றி கிடைக்கப் போகிறது என்று அசட்டையாக இருக்கும் பொழுது அதில் வெற்றி பெற முடியாவிட்டால் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். சற்றும் எதிர்பாராத இந்த ஏமாற்றத்தை இவர்களால் அவ்வளவு எளிதாக கடந்து வந்து விட முடியாது.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கைக்கு இலக்கணமாகத் திகழ்பவர்களாக இருக்கின்றனர். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதனை துணிச்சலாக சிங்கம் போல் கர்ஜனையோடு எதிர்கொள்ளும் இவர்கள் அவ்வளவு சுலபமாக எவரையும் எடை போட்டு விடுவதில்லை. அப்படி ஒருவரை இப்படித்தான் இவர் இருக்கிறார் என்று எடை போட்டு விட்டு அவர்களை நம்ப ஆரம்பித்து விட்டால் பின்னர் அதில் ஏமாற்றம் அடையும் பொழுது அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். தீர்க்கமாக நம்பும் விஷயம் இன்று இல்லை என்றாகும் பொழுது அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் எதையும் தராசு போல எடை போட்டு பார்க்கக் கூடியவர்கள். நேர்மையாக செயல்பட வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்டவர்களாக விளங்கும் இவர்கள் தன்னைத் தவிர எவரையும் எளிதாக நம்புவதில்லை. ராஜாவும் நானே, மந்திரியும் நானே என்கிற கொள்கை படைத்த இவர்களுக்கு ஒருவர் மீது நம்பிக்கை வருவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அப்படி நம்பும் பொழுது அல்லது ஒரு செயலில் நம்பி இறங்கும் பொழுது அதில் முழு முயற்சியோடு நியாயமாக நடந்து கொள்வார்கள். ஆனால் அதில் ஏமாற்றம் காணும் பொழுது அதிலிருந்து மீண்டு வருவதற்கு பல காலம் எடுத்துக் கொள்வார்கள். சரி பரவாயில்லை போனால் போகட்டும் என்று இவர்களால் விட்டுவிட முடியாது. தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் இதே போல எளிதில் மற்றவர்களை நம்பி ஏமாந்து விடுவதில்லை. யார் என்ன மூளை சலவை செய்தாலும் கூட இவர்கள் எளிதாக அதற்கெல்லாம் மசிந்து விடுவது இல்லை. தனக்கு மிகவும் நெருங்கியவர், பிடித்தவர்கள் தன்னை ஏமாற்ற நினைத்தால் உஷாராக அதிலிருந்து தப்பித்து விடும் இவர்கள், தெரியாமல் ஒருவரை முழுமையாக நம்பி விட்டால் அவ்வளவுதான் அதிலிருந்து ஒருபோதும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். நம்மை யார் ஏமாற்றிவிட முடியும்? என்கிற அதீத நம்பிக்கையே இவர்களுக்கு சில சமயங்களில் ஏமாற்றமாகி விடும். அப்படி ஏமாறும் பொழுது அதிலிருந்து இவர்களால் எளிதாக மீண்டு வர முடியாது. பித்துப் பிடித்தவர்கள் போல அதையே நினைத்து புலம்பி கொண்டு இருப்பார்கள். அவர்களாகவே உணர்ந்து அதிலிருந்து மீண்டு வந்தால் தான் உண்டு.

- Advertisement -