உங்களுக்கு ஆண் குழந்தை வாரிசு உண்டாக இதை செய்யுங்கள் போதும்

baby-boy

திருமண வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதே தம்பதிகளுக்கு பிறக்கின்ற குழந்தைகள் தான். ஆசைக்கு ஒரு பெண் குழந்தை, ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை என்பது இன்றும் பரவலாக பேசப்படும் ஒரு பழமொழியாகும். குழந்தை செல்வத்தில் ஆண், பெண் குழந்தை என்கிற பேதம் இல்லை என்றாலும், தங்களுக்கு வாரிசாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பும் தம்பதிகள் பலர் இருக்கின்றனர். அப்படி அவர்கள் விரும்பியவாறு ஆண் குழந்தை பிறக்க இருக்கும் விரதம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Baby

தெய்வங்களில் குழந்தை பருவத்தில் பல லீலைகள் புரிந்தவரும், குழந்தையாகவே விரும்பப்படுபவராக ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார். ஆண் வாரிசு வேண்டும் என விரும்புபவர்கள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு விரதம் இருந்து வழிபடுவதால் அவர்களின் விருப்பம் நிறைவேறும். இந்த கிருஷ்ண விரத பூஜை செய்வதற்கு சிறந்த நாள் கண்ணனின் பிறந்த நாளான கோகுலாஷ்டமி தினமாகும்.

கோகுலாஷ்டமி அன்று உங்கள் பூஜையறையில் ஒரு மர பீடத்தை வைத்து, அந்த பீடத்தின் மீது ஒரு சிவப்பு நிற துணியை பரப்பி வைக்கவும். பவித்திரிகரண மந்திரத்தை துதித்தவரே பீடத்தின் மீது வைக்கப்படவிருக்கும் கிருஷ்ணர் சிலை அல்லது கிருஷ்ணர் படம் , பூஜை அறை மற்றும் பூஜை பொருட்களின் மீது புனித தீர்த்த நீரை தெளிக்க வேண்டும். கிருஷ்ணரின் விக்ரகத்திற்கு புத்தாடைகள் அணிவித்து, உங்கள் பூஜையறையை கோயில் போன்று நன்றாக அலங்கரித்து கொள்ள வேண்டும்.

Lord krishnar

இப்போது கிருஷ்ணர் படம் அல்லது சிலையை சிவப்பு துணி பரப்பிய பீடத்தின் மீது வைக்க வேண்டும். ஊதுபத்தி கொளுத்தி தூப ஆராதனை காட்டி, அகல்விளக்கில் தீபம் ஏற்றி கையில் வைத்து கொண்டவாறே கிருஷ்ணருக்கு ஆராதனை காட்டி, அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்க வேண்டும். பிறகு உங்களின் நகைகள், புத்தாடைகள் போன்றவற்றை கிருஷ்ணருக்கு முன்பாக வைத்து வணங்க வேண்டும்.

- Advertisement -

Krishnar

இப்போது கோபி சந்தனத்தை கிருஷ்ண விக்கிரகம் அல்லது படத்திற்கு திலகமிட்டு, அந்த திலகத்தில் அட்சதை அரிசியை வைக்க வேண்டும். பின்பு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த கற்கண்டுகள் மற்றும் இதர இனிப்புகளை , கங்கை நீரையும் நைவேத்தியம் வைத்து, வாசம் மிக்க மலர்களை கிருஷ்ணருக்கு சாற்றி வணங்க வேண்டும்.

ஓம் தேவகி ஸுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத

தேவ தேவ ஜகந்நாத கோத்ர விருத்தி கரோ பிரபு
தேஹிமே தநயம் ஸுக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

என்கிற மந்திரத்தை உங்களுக்கு ஆண் குழந்தை பாக்கியத்தை கிருஷ்ண பரமாத்மா அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு 108 முறை துதித்து வணங்க வேண்டும். இந்த பூஜை செய்த பிறகு தினமும் காலையில் கிருஷ்ண பகவான் சிலை அல்லது படத்திற்கு முன்பாக நின்று இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் சீக்கிரத்திலே கண்ணனை போன்ற அழகிலும், அறிவாற்றலிலும் சிறந்த ஆண் குழந்தை உங்களுக்கு பிறக்க அருள் புரிவார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இதையும் படிக்கலாமே:
நாக, சர்ப்ப தோஷம் போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vratham for baby boy in Tamil. It is also called as Krishna valipadu in Tamil or Gokulashtami pooja in Tamil or Kulanthai varam tharum viratham in Tamil or Sri krishna manthiram in Tamil.