உங்களின் நாக, சர்ப்ப தோஷங்கள் நீங்க இவற்றை செய்யுங்கள் போதும்

naga-dhosham

பல உயிரினங்கள் இந்த உலகில் இருந்தாலும் தனது பல்லில் இருக்கும் விஷத்தால் தான் கடிக்கும் ஒரு உயிரை கொல்லும் சக்தி கொண்ட பாம்பு இயற்கையின் படைப்பில் ஒரு அதிசயமாகும். நமது வேதங்களில் பாம்பு மனிதர்களின் ஆன்மீக வாழ்க்கையோடு தொடர்புடையதாக கூறப்பட்ட்டிருக்கிறது. பாம்புகளின் அம்சம் கொண்ட நிழற்கிரகங்களாக ராகு – கேது இருக்கிறது. அந்த ராகு – கேது கிரகங்களால் ஏற்படும் நாக தோஷத்திற்கான நாக சாந்தி பரிகார முறைகளை தெரிந்து கொள்ளலாம்.

naga-worship

சூரியன் மற்றும் சந்திர கிரகங்களின் போது ஏற்படும் நிழல்கள் தான் ராகு மற்றும் கேது கிரகங்களாகும். சனி கிரகத்தை போலவே மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றலை வெளிப்படுத்த கூடிய கிரகங்களாக ராகு – கேது கிரகங்கள் இருக்கிறது. பாம்பு அம்சம் கொண்ட கிரகங்கள் என்பதால் ஒருவரின் ஜாதகத்தில் சர்ப்ப, நாக தோஷங்கள் ஏற்படுவதற்கு இந்த இரு கிரகங்களே காரணமாகின்றன.நாக தோஷங்கள் நீங்கி நாக சாந்தி ஏற்படுவதற்கான பரிகாரங்கள் இதோ.

தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வருவதால் ராகு – கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் நாக, சர்ப்ப தோஷங்கள் நீங்கும். ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள்ளாக நந்தி மற்றும் சிவனுக்கு வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டின் போது நந்தி பகவான் மற்றும் சிவபெருமானை வழிபடுவதால் ராகு – கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

ragu-parigaram

பொருள் வசதி மிக்கவர்கள் தங்கம் அல்லது வெள்ளியில் சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாட்கள் பாலாபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு வேதமறிந்த அந்தணர் ஒருவருக்கு புது வேட்டி, துண்டு, தாம்பூலம் தட்சணை ஆகியவற்றோடு நாக விக்கிரகத்தையும் தானம் செய்வதால் நாக தோஷம் நீங்கி நாக சாந்தி ஏற்படும்.

- Advertisement -

rahu-ketu

ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் தாமதமாகும் பெண்கள், அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழே இருக்கும் நாக சிலைக்கு செவ்வாய்க் கிழமைகளில் பால் ஊற்றி அபிஷேகம் செய்து வர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் செய்து வந்தால் நாக சாந்தி ஏற்பட்டு நாகதோஷங்கள் நீங்குகிறது.

நாக,சர்ப்ப தோஷங்கள் ஏற்பட்டவர்கள் நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வந்து வணங்க வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என்ற எண்ணிக்கையில் சுற்றுகளை அமைத்துக்கொண்டு வணங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் வலம் வர நாக, சர்ப்ப தோஷங்கள் யாவும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கண்டங்கள் ஏற்படாமல் இருக்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Naga shanti pariharam in Tamil. It is also called as Naga dosham valipadu in Tamil or Rahu ketu valipadu in Tamil or Sarpa dosha in Tamil or Naga dhosam neenga in Tamil.