வியாபாரம் ஓஹோவென்று நடக்க,  உங்க கடை டேபிள் மேல இதை மட்டும் வெச்சு பாருங்க! வாடிக்கையாள் கட்டாயம் உங்க கடைய தேடித்தான் வருவாங்க.

viyabaram
- Advertisement -

சில பேர் கடைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதை பார்க்கும் போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்து கடைக்காரர்களுக்கும் நிச்சயம் தோன்றும் ஒரு எண்ணம்! ‘இவர்கள் கடையில் மட்டும் எப்படி இவ்வளவு வியாபாரம் நடக்கிறது?’ இது கெட்ட எண்ணம் இல்லை. இருந்தாலும், அவர்களின் அந்த எண்ணமானது, நாளடைவில் கண் திருஷ்டி தோஷமாக மாறும். கட்டாயம் அந்தக் கடையில வியாபாரம் குறையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். நஷ்டம் ஏற்படும். இதுதான் உண்மை.

shop

இதையெல்லாம் அறிந்த வியாபாரிகள், தங்கள் கடையின், பாதுகாப்புக்காக, அவர்களுக்கு என்று ஒரு வட்டத்தை கட்டாயம் வைத்து தான் இருப்பார்கள். சில பேருக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால், பட்டு தெளிந்தவுடன் நம்பும், பலபேர் இருக்கிறார்கள், என்று சொன்னால் அது கட்டாயம் பொய்யாகாது. சரி. கஷ்டம் வருவதற்கு முன்பாகவே உங்கள் கடையை நீங்கள் சாமார்த்தியமாக பார்த்துக்கொள்வது உத்தமம்.

- Advertisement -

உங்கள் கடையாக இருந்தாலும், நீங்கள் தொழில்செய்யும் இடமாக இருந்தாலும், அதை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்திகள் கொண்ட இந்த பொருட்களை எல்லாம் உங்கள் கடையின், டேபிள் மீதோ அல்லது நீங்கள் சொந்த தொழில் செய்யும் அலுவலகத்தின் டேபிள் மீது வைத்துக் கொள்ளலாம். அதாவது முதலாளி உட்காரும் நாற்காலிக்கு, முன்னால் இருக்கக்கூடிய, குறிப்பாக கல்லாப் பெட்டி இருக்கக்கூடிய டேபிள் மீது வைக்கும் பட்சத்தில் மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

shop-owner

இது ரொம்ப சுலபமான பரிகாரம் தான். மகாலட்சுமிக்கு பிடித்தமான சில பொருட்களை ஒன்றாக சேர்த்து, ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு, வைக்கப் போகின்றோம் அவ்வளவுதான். ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளவேண்டும். அதில் முதலில் மூன்று வெற்றிலைகளை, காம்பு பக்கம் டம்ளருக்குள் இருக்குமாரு, போட்டு விடுங்கள். அந்த மூன்று வெற்றிகளையும், ரவுண்டா அடுக்கிகோங்க! கண்ணாடி டம்ளரில் ஒன்னு பக்கத்துல ஒன்னு வச்சு.

- Advertisement -

அதன் பின்பு, வெற்றிலை வைத்திருக்கும் கண்ணாடி டம்ளருக்குல், ஒரு எலுமிச்சை பழம், விரலி மஞ்சள், ஆறுமுக ருத்ராட்சம், இரண்டு கொட்டைப் பாக்குகள், மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள், சிறிய கோமதி சக்கரம், வெள்ளை நிற சோழிகள் 3, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு போட்டு வையுங்கள். இதை அப்படியே உங்கள் டேபிள் வைத்தால் போதும். சுவாமி படத்திற்கு தூபம் காட்டும் பழக்கம் இருந்தால், அப்படியே இந்த டம்ளருக்கும் ஒரு முறை தூபத்தை காட்டி விடுங்கள். அவ்வளவுதான். வெற்றிலை மட்டும் வாடும் பட்சத்தில் அடுத்த நாள் அதை எடுத்துப் போட்டு விட்டு, புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

komathi-sakaram

மற்றபடி அதனுள் இருக்கும் பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும். கண்ணாடி டம்ளரை மட்டும், தினந்தோறும் கழுவி மாற்றிக்கொள்ளுங்கள். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வரும் பட்சத்தில் உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். யாருடைய கண் திருஷ்டியும் உங்கள் கடை மீது படாது.

- Advertisement -

கண்ணாடி டம்ளரில் உள்ள எலுமிச்சை பழத்தை மட்டும் எடுத்து இரவு கடையை சுற்றி உடைத்து விடுங்கள். புது எலுமிச்சம்பழத்தை போட்டுக் கொள்ளுங்கள். வியாபாரம் நல்ல முன்னேற்றத்தோடும், நல்ல லாபத்தைத்தோடும் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

lemon

சின்ன சின்ன பரிகாரங்களை செய்து தான் பாருங்களேன்! இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் வியாபாரத்தை எந்த முறையில் முன்னேற்றி செல்வது என்று, பலபேர் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். வாழ்க்கையில் முன்னேறி செல்ல, அறிவையும், ஆன்மீகத்தையும் கலந்து பிரயோக படுத்துங்கள். வெற்றி நிச்சயம்.

இதையும் படிக்கலாமே
தோல்வி என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. விநாயகருக்கு 3 வாரங்கள் இந்த தீபம் ஏற்றினால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Viyabaram peruga pariharam Tamil. Viyabaram peruga Tamil. Viyabaram peruga tips in Tamil. Viyabaram selika Tamil

- Advertisement -