சுவற்றில் இருக்கும் அழுக்கை துடைத்தால், சுண்ணாம்பும் சேர்ந்து துணியோடு வருகிறதா? இந்த டிப்ஸை யூஸ் பண்ணி ஒருவாட்டி துடச்சு பாருங்க! சுண்ணாம்பு அப்படியே இருக்கும். அழுக்கு சுத்தமாக போய்விடும்.

wall-claning
- Advertisement -

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சுவற்றில் உள்ள அழுக்கை துடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதாவது சில அழுக்குகளை ஈரத்துணி கொண்டு, சில லிக்விடை வைத்து அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்தால் கறைகள் நீங்கிவிடும். கூடவே சேர்ந்து அந்த இடத்தில் சுண்ணாம்பும் நீங்கி விடும். பார்ப்பதற்கு வட்டவடிவில் அடையாளம் தெரிய தொடங்கும். சுவற்றில் இருக்கும் அழுக்கு மட்டும் தான் போகவேண்டும். சுண்ணாம்பு போக கூடாது, என்றால் எப்படி சுவரை துடைப்பது?

wall-claning1

எந்தவிதமான அடையாளமும் இல்லாமல், சுவற்றில் இருக்கும் அழுக்கை மட்டும் நீக்க வேண்டும் என்றால், இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பார்க்கலாம். உங்களுக்கு இந்த டிப்ஸ் ஒர்க்கவுட் ஆச்சுன்னா இதையே மெயின்டைன் பண்ணிக்கோங்க. ஒரே ஒரு சின்ன இடத்தில் மட்டும் அப்ளை பண்ணி பாருங்க.

- Advertisement -

எந்த இடங்களில் உங்கள் கை பட்ட கறைகள் இருக்கின்றதோ, எந்த இடங்களில் உங்களது குழந்தைகள் பென்சில் வைத்து கிறுக்கி உள்ளார்களோ, அந்த இடத்தில் சாக்பீஸால் எழுதி கொடுக்க வேண்டும். அதாவது சாக்பீஸை கொண்டு, கறைகளின் மேல் நன்றாக கிறுக்கி விட வேண்டும். கறைகளுக்கு மேல் சாக்பீஸ் திட்டு முழுவதும் படித்த பின்பு, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். (உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு சாக்பீஸைக்கொண்டு கறைகள் மேல் கிறுக்கலாம்.)

wall-claning2

சாதாரண கறைகள் ஆக இருந்தால், காட்டன் துணியில் கொஞ்சமாக தண்ணீரை நனைத்து துடைத்தால், கொஞ்சம் அழுத்தம் கொடுத்து துடைத்தாலே, சாக்பீஸ் கறைகளோடு சேர்ந்து, அழுக்கு கறைகள் மட்டும் நீங்கும். சுவற்றில் உள்ள சுண்ணாம்பு போகாது. சில பேர் வீட்டில் சுண்ணாம்பை தவிர்த்து, ஒட்டாத அளவிற்கு டிஸ்டம்பர் பெயிண்ட் அடித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சுவற்றிலும், இந்த மேல் சொன்ன சாக்பீஸ் டிப்சை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

கொஞ்சம் கடினமான கறைகள் இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தில் வெறும் ஈரத்துணியை கொண்டு மட்டும் துடைக்காமல், சுத்தப்படுத்தக்கூடிய லிக்விடையும்  கொஞ்சம் ஈரத் துணியோடு சேர்த்து துடைக்கும் பட்சத்தில், சுவர் உடனே சுத்தமாகிவிடும். சுண்ணாம்பு 80 சதவிகிதம் சுவற்றை விட்டு போகாமல் இருக்க, கறைகள் மீது சாக்பீஸ் மட்டும் கிறுக்கி, அதன்பின்பு துடைத்து, உங்க வீட்ல சின்ன இடத்தில ட்ரை பண்ணி பாருங்க!

wall-claning3

இதோடு எண்ணெப் பிசுக்கு படிந்திருக்கும் இடங்களாக இருந்தால், விடாப்பிடியான கறைகள் இருந்தால், அந்த இடத்தில் பல் துலக்கும் பேஸ்ட் வைத்து சுத்தம் செய்யலாம், அல்லது முகத்திற்கு போடும் பவுடரை எண்ணெப் பிசுக்குகள் இருக்கும் இடத்தின் மேல் தூவி அதன் பின்பு துடைத்து எடுக்கலாம். உதாரணத்திற்கு டயில்ஸின் மேல் பக்கத்தில் சிறிய இடம் இருக்கும், அதாவது டைல்ஸ் முடிந்து சுவர் ஆரம்பிக்கும் இடத்தில், எண்ணெய் பிசுக்குகள் ஒட்டி இருக்கும். (மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு) அந்த இடத்தில் முகத்திற்கு போடும் பவுடரை தூவி, ஒரு நிமிடம் கழித்து துணியால் துடைத்து எடுத்தால் சுத்தமாக எண்ணெப் பிசுக்கு மட்டுமே நீங்கி விடும்.

- Advertisement -

wall-claning4

இப்படிப்பட்ட கறைகளை முதலில் சுத்தம் செய்து விட்டாலும், அதன் பின்பு, புதியதாக வேறு ஒரு காட்டன் துணியை எடுத்துக் கொண்டு, கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்த இடத்தை இரண்டாவது, ஒருமுறை துடைத்து எடுத்து விட்டால், தேவையற்ற கறைகள் காய்ந்த பின்பு வெளியே தெரியாமல் இருக்கும். நீங்கள் இரண்டாவது முறையாக துடைக்க பயன்படுத்தும் காட்டன் துணியில் அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
இந்த டப்பாவை இனி தூக்கிப் போடாதீங்க! உங்க வீட்டு சமையலறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க, இந்த ஒரு டப்பா போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -