இந்த டப்பாவை இனி தூக்கிப் போடாதீங்க! உங்க வீட்டு சமையலறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க, இந்த ஒரு டப்பா போதும்.

box

நம்முடைய வீடும், நம் வீட்டு சமையல் அறையும் எப்போதும் வாசமாக இருக்க வேண்டும் என்றால், அதிகப்படியான விலை கொடுத்து ரூம் ஸ்பிரே வாங்கி அடிக்க வேண்டும் என்ற அவசியம், இனி கிடையாது. நிறைய காசு செலவு பண்ண வேண்டாம். உங்களுடைய வீட்டில் ஸ்வீட் போன்ற சாப்பிடும் பொருட்கள் எல்லாம், பிளாஸ்டிக் கண்டெய்னரில் கிடைக்கும் அல்லவா? அந்த பிளாஸ்டிக் பாக்ஸை, வீணாக தூக்கிப் போடாமல், நம்முடைய வீட்டில் உபயோகமாக எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

box1

காலியாக இருக்கும் இந்த பிளாஸ்டிக் டப்பாவிற்கு உள்ளே கொஞ்சமாக ஆப்ப சோடாவை போட்டுக்கொள்ளுங்கள். இந்த ஆப்பசோடாவில் உங்களுக்கு பிடித்த வாசனை நிறைந்த, வாசனை திரவியங்களை 4 சொட்டு சேர்த்தால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் சென்ட் கூட, 4 சொட்டை இந்த சோடா உப்பில் கலந்து விட்டுவிடலாம்.

இல்லையென்றால் ஜவ்வாது, அத்தர் இப்படி உங்களுக்குப் பிடித்த வாசனை மிகுந்த பொருட்களை கொஞ்சமாக இந்த சோடாஉப்புடன் கலந்து விட வேண்டும். அதன் பின்பு இந்த பிளாஸ்டிக் பாக்ஸின் மேல் மூடியை போடலாம். மூடி போட்டால் ஒரு சிறிய அணியை சூடுபடுத்தி மூடியில் 4 ஓட்டைகளை போட வேண்டும்.

perfume

அப்படி இல்லை என்றால், ஒரு பிளாஸ்டிக் கவரை இந்த பாக்ஸின் மேல் போட்டு, அதன் மேலே ஒரு ரப்பர் பேண்டை மாட்டிவிட்டு ப்ளாஸ்டிக் கவரின் மேல், சிறிய ஓட்டைகளைப் போட்டு விடலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். இப்படி 2 அல்லது உங்களுக்கு தேவையான டப்பாக்களை தயார் செய்து, சிங்குக்கு அடியில் ஒன்று, சமையலறை அலமாரிகளில் ஒன்று, குளியலறையில் ஒன்று, இப்படியாக உங்களுக்கு எந்த இடத்தில் எல்லாம் கெட்ட வாடை வீசுகிறதோ அந்த இடத்தில் எல்லாம் ஒரு டப்பாவை வைத்து விடுங்கள்.

- Advertisement -

கெட்ட வாடையை சோடா உப்பு ஈர்த்துக் கொண்டு, சோடா உப்பில் இருக்கும் வாசனை மிகுந்த பொருட்களின் வாடை உங்களுக்கு லேசாக வீசிக்கொண்டே இருக்கும். இதன் உள்ளே உள்ள பொருளை பத்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றினால் மட்டுமே போதும்.

kitchen1

அதாவது உள்ளே இருக்கும் சோடா உப்பை எடுத்து வெளியே கொட்ட வேண்டாம். சோடா உப்பில் வாசனை திரவியத்தை இன்னொரு முறை சேர்க்க வேண்டும், அவ்வளவு தான். அது கூட பத்து நாட்களுக்கு ஒரு முறை சேர்த்தால் போதும். மாதத்திற்கு, ஒரு முறை உள்ளே இருக்கும் சோடா உப்பை புதியதாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

box2

இந்த சோடா உப்பின் வாசத்திற்கு கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், கரப்பான் பூச்சி தொல்லையா இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுடைய வீட்டில் ஒரு சிறிய டப்பாவை வைத்து சோதித்துப் பாருங்கள். பிடித்திருந்தால், எல்லா இடத்திற்கும் நிறைய டப்பாக்களை இதேபோல் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் உயரம் அதிகமாக இருக்கும் பெரிய பிளாஸ்டிக் கண்டைனர்களை விட, உயரத்தில் சிறிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் பாக்ஸ் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான், வாசனை நன்றாக அதிகப்படியாக வெளியாகும்.

இதையும் படிக்கலாமே
வெண்ணை பந்து போல இட்லி மாவு 10 நிமிடத்தில் அரைக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா? இவ்வளவு நாளா இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட போறீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.