உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரே வாய்ப்பு – ரோஹித்

koli

2019ஆம் ஆண்டு 50ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆடும் அணிகள் மற்றும் போட்டிகளின் விவரம் ஆகிய ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு ஆயத்தம் ஆகி வருகின்றன.

இந்தியா தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி வரும் 12ஆம் தேதி துவங்க உள்ளது. மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடர். இந்திய அணிக்கு ஒரு முக்கிய தொடராக அமையும். ஏனெனில் உலகக்கோப்பை செல்லும் அணியை தேர்வு செய்வதில் இந்த தொடர் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

இந்நிலையில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் கூறுகையில் : தோனியை இந்த உலககோப்பையை வென்று கொடுத்து சிறப்பாக வழியனுப்ப திட்டமிட்டுள்ளோம். அணியின் வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர் . எனவே அணியில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த தொடரில் உங்களது திறமையினை நிரூபித்து உலகக்கோப்பை அணிக்கு வலுவான பங்களிப்பை அளிக்க முடியும் என்று கூறினார்.

மேலும் உலகக்கோப்பை போட்டிக்கு செல்லும் அணியில் இதுவரை யாரும் உறுதியாக இடத்தினை பிடித்து விட்டோம் என்று எண்ணாமல் அனைவரும் கடுமையாக பயிற்சி செய்து சிறப்பாக விளையாடவேண்டும். தோனி அணியில் இருப்பது நிச்சயம் ஆரோக்கியமே. அவரின் வழிகாட்டுதல் நிச்சயம் இந்திய அணிக்கும்,இந்திய அணியின் கேப்டனுக்கும் உதவி புரியும் என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே :

தென்னாபிரிக்க வீரர் அல்பி மோர்கல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்