ஒரு சொட்டு தண்ணீர் கூட வேண்டாம். உங்கள் வீட்டு சிங்கையும், உங்கள் வீட்டு வாஷ்பேஷனையும் சுத்தம் செய்ய இப்படி ஒரு சூப்பர் டிப்ஸை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க!

shink

நம்ம வீட்ல இருக்க சிங்கை பலபலன்னு வச்சிக்கிறது ஒரு பெரிய கஷ்டம். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் வாஷ்பேஷன். குறிப்பாக, அந்த வாஷ்பேஷன் நம்முடைய வீட்டு ஹாலில், டைனிங் ஹாலில் இருந்தால், வருபவர்கள் எல்லாம் பார்க்கும் போது, அது அழுக்காக இருந்தால் அவ்வளவு நல்லா இருக்காது. இந்த இரண்டையும் சுத்தம் செய்ய வேண்டும். கையில் தண்ணீரும் படக்கூடாது. கஷ்டமும் படக்கூடாது. என்ன செய்யலாம்? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக.

shink1

முதலில் சிங்குக்கு வருவோம். இந்த டிப்ஸ் எவர் சில்வர் சிங்க் உள்ளவர்களுக்குத் தான் பயன்படும். முதலில் உங்களுடைய சிங்கை எப்பவும் போல கழுவி சுத்தம் செய்து விடுங்கள். அதன் பின்பு அதை ஒரு துணியால் சுத்தமாக துடைத்து விட வேண்டும். ஒரு துளி தண்ணீர் கூட இருக்கக் கூடாது. அதன் பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, எந்த மாவு வேண்டு மென்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அந்த மாவை சிங்கின் உள் பகுதி மேல் பகுதி இப்படியாக எல்லா இடங்களிலும் படும்படி போடவேண்டும். எவர்சில்வர் எந்த இடத்தில் எல்லாம் இருக்கின்றதோ அந்த இடத்தில் எல்லாம் தூவி விட்டு, அந்த காட்டன் துணியை கொண்டோ அல்லது உங்களது கையை கொண்டோ இந்த மாவை வைத்து லேசாக தேய்த்தால் போதும். சிங்க் பளபளவென மாறிவிடும்.

shink2

இரண்டாவதாக, வாஷ் பேஷன். முதலில் உங்களது வாஷ் பேசினை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் துணி வைத்து துடைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த வாஷ் பேஸினில் எல்லா இடங்களிலும் படும்படி பேக்கிங் சோடாவை தூவி விடவேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பு. இப்போது உங்களது வாஷ் பேசினை டிஷ்யூ பேப்பரை வைத்து மூடிவிடுங்கள். அதாவது பேக்கிங் சோடாவுக்கு மேல் டிஷ்யூ பேப்பரை எல்லா இடங்களிலும் படும்படி வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அந்த டிஷ்யூ பேப்பரில் நன்றாக வினிகரை தெளித்து நனைத்து விடுங்கள். கீழே சோடா உப்பு, நடுவில் டிஷ்யூ பேப்பர், மேலே வினிகரை நன்றாக தெளிக்க போகிறீர்கள். அவ்வளவு தான். இப்போது 30 நிமிடங்கள் டிஷ்யூ பேப்பரோடு வாஷ்பேசின் நன்றாக ஊறட்டும். அதன்பின்பு அந்த டிஷ்யூ பேப்பரோடு சேர்த்து, உங்களது வாஷ்பேஷனை நன்றாக துடைத்து எடுத்தீர்கள் என்றால் அதில் படிந்திருக்கும் அழுக்கு, உப்பு கரையெல்லாம் சேர்ந்து அப்படியே டிஷ்யூ பேப்பரில் வந்துவிடும். கரைகள் அதிகம் இருக்கும் பகுதியில் அடர்த்தியாக சோடா உப்பை போடுங்கள். அதன் மேல் வினிகரை நன்றாக தெளியுங்கள்.

tissue

மீண்டும் ஒரு உலர்ந்து துணியையோ அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து இதை நீங்கள் துடைத்துக்கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால், மிகவும் மெல்லியதாக இருக்கும் காட்டன் துணியையும் இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

paste

ஹாலில் இருக்கும் வாஷ்பேஷனை தண்ணீர் ஊற்றி கழுவி, அந்த தண்ணீரால் தரையில் எல்லாம் சிந்தி, மறுபடியும் ஹாலை மாப் போடவேண்டிய இரட்டிப்பு வேலை இப்போது கிடையாது. சரி மூன்றாவது இன்னொரு டிப்ஸ். நம்முடைய சமையலறை, மற்ற இடங்களில் தரை சுத்தமாக இருக்கும். ஆனால் தரையில் ஓரங்களில் டைல்ஸ்ஸ் பகுதிகளில் அந்த கோடுகளில், கருப்பு கருப்பா அழுக்கு தெரியும்.

mop1

இப்படிப்பட்ட இடங்களில் கொஞ்சமாக பேஸ்டை பல் தேய்க்கும் பிரஷ்ஷில் வைத்து, அந்த பிரஷ்ஷால், அந்த மூலையில் தடவி விட்டுவிட்டு, அதன் பின்பு மாப் போட்டால் சுத்தமாக துடைத்தெடுத்தால், அந்த அழுக்கு வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சொல்லப்பட்டிருக்கும் 3 டிப்ஸையும் நீங்க ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரா? இல்லை? என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

இதையும் படிக்கலாமே
நெஞ்சில் கட்டியிருக்கும் எப்படிப்பட்ட சளியும் ஒரே நாளில் கரைந்துவிடும். பல நாட்களாக தீராமல் வரும் இருமலையும் சட்டென நிறுத்தும் சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.