இனி இதை செஞ்சுட்டு தூக்கி எறிந்து விடாதீர்கள்! இப்படியும் பயன்படுத்தலாம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

mooligai-soil

நாம் பயன்படுத்தும் பல விஷயங்கள் மறுசுழற்சி செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவே இயற்கை அன்னை நமக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சில விஷயங்களை தவிர மற்ற 99% விஷயங்கள் உலகத்தில் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது நாம் பயன்படுத்திவிட்டு இது வேண்டாம் என்று தூக்கி எறியும் ஒரு சில விஷயங்கள் புதிய உருவாக்கத்தை நமக்கு கொடுக்கும். அப்படியான ஒரு அற்புதமான விஷயத்தை தான் இப்பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

kasayam

நாம் எல்லோரும் இந்த காலகட்டத்தில் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சில மூலிகைப் பொருட்களை கசாயம் செய்து குடித்து வருகிறோம். வெளியில் இருந்தும் இந்த மூலிகைப் பொருட்கள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இவ்வகையான மூலிகைப் பொருட்களை வைத்து நாம் கசாயம் செய்து வாரம் ஒரு முறை குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இப்படி நாம் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்களில் மீதமாகும் சக்கை பொருட்கள் வீணாகக் குப்பையில் தூக்கி எரிந்து விடுகின்றோம்.

உண்மையில் மூலிகைப் பொருட்களில் இருக்கும் அற்புத சக்திகள் நாம் எவ்வளவு கொதிக்க வைத்தாலும் அதில் இருக்கும் சக்கையிலும் நிச்சயம் மீதம் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனை வீணாக தூக்கி எறிந்து விடாமல் உங்களுடைய வீட்டு செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். அதில் இருக்கும் கசப்புத்தன்மை பூச்சி, புழுவெட்டு போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களுடைய செடி வகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்வோம்.

insect-plant

நீங்கள் கசாயம் குடித்து விட்டு மீதமாகும் சக்கை பொருட்களை ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழுக்க அதை ஊறவிட்டு மறுநாள் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை பூச்சி, புழுக்கள் தொந்தரவுகள் இருக்கும் செடி வகைகளுக்கு தெளிப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் நீங்கி செடிகள் செழிப்பாக வளரும். இனி கசாயத்தை வீணாக்குவார்களா என்ன?

- Advertisement -

அதே போல் பழத்தோல்களை மற்றும் காய்கறி கழிவுகள் என்று தூக்கி எறியாமல் அதனை மண்ணைத் தோண்டி புதைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து அந்த மண்ணுடன் அப்படியே எடுத்து உங்களுடைய செடிகளுக்கு உரமாக போடுங்கள். அந்த மண்ணோடு சேர்ந்து அந்த தோல் வகைகள் கழிவுகளாக கலந்து உரமாக மாறிவிட்டிருக்கும். இதனை செடி வகைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் செழிப்பாக செடிகள் வளரும் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

kashayam

எப்போதும் எந்த உணவு வகையும் நாம் வீணாக்குவது அன்னலட்சுமிக்கு எதிரான செயலாகும். உணவுப் பொருட்களை வீணாக்குவதால் வீட்டில் வறுமை உண்டாகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு பொருட்களுக்கும் நிச்சயம் மறுசுழற்சி என்பது இருக்கும். அதனை சரியாக செய்வதன் மூலம் நம்முடைய உழைப்பும் வீணாகி போகாது. மனதிற்கும் புதுப்புது விஷயங்களை செய்ய வேண்டும் என்கிற ஆசை ஏற்படும்.

veggitable-waste

தோட்டக்கலை என்பது மிகச் சிறந்த கலை ஆகும். அதனை சிறு அளவிலாவது உங்கள் வீட்டில் செய்வது உண்மையில் மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுவிப்பதற்கு துணையாக இருக்கும். மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதையே நினைத்து புலம்புவதை விட்டுவிட்டு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
1 உருளைக்கிழங்கு இப்படி புதைத்து பாருங்க! 1 கிலோ உருளைக்கிழங்கு ரொம்ப சுலபமாவே கிடைக்கும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.