1 உருளைக்கிழங்கு இப்படி புதைத்து பாருங்க! 1 கிலோ உருளைக்கிழங்கு ரொம்ப சுலபமாவே கிடைக்கும்.

potato-urulai

உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி வகை. மிகவும் சாதாரணமாக எல்லா கடைகளிலும் கிடைக்கும் உருளைக்கிழங்கு நம் நாட்டில் அறுவடை செய்ய முடியாது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் உருளைக்கிழங்கு சாதாரண தொட்டியில் கூட நம்மால் அறுவடை செய்ய முடியும். ஒரு உருளைக்கிழங்கு புதைத்து வைத்தால் கூட உங்களுக்கு நிறைய உருளைக்கிழங்குகள் அறுவடைக்கு தயாராகி விடும். உருளைக்கிழங்கு விதைப்பு மற்றும் அதை சுலபமாக அறுவடை செய்யும் முறையை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

potato-planting

முதலில் உருளைக்கிழங்கை எப்படி புதைக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கு அறுவடை செய்ய பெரிதாக பலரும் எதையாவது காசு கொடுத்து வாங்கி பராமரித்து வருவார்கள். அது போல் செய்ய முடிந்தவர்கள் தாராளமாக செய்து கொள்ளலாம். ஆனால் சாதாரணமாக வீட்டிலேயே உருளைகிழங்கு அறுவடை செய்ய நினைப்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்.

உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது சிறியதாக பழைய உருளைக்கிழங்கை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நாட்கள் வரை நீங்கள் அப்படியே வைத்திருந்தால் உருளைக்கிழங்கு முளைவிட ஆரம்பித்து விடும். வெளியிலேயே வைத்துக் கொள்ளலாம். முளைவிட்ட உருளைக்கிழங்கை விதைப்பதற்கு முதலில் இந்த மண் கலவையை தயார் செய்யுங்கள்.

potato-planting1

உங்கள் தொட்டியில் இருக்கும் சாதாரண மண் கலவையுடன் தேங்காய் நார், மற்றும் புளித்த மோரை ஊற்றி மண்ணுக்கு சத்து கொடுத்து விடுங்கள். இதற்கு ஒரு தயிரை வாங்கி ஐந்து நாட்கள் வெளியில் வைத்து புளித்த மோராக புளிக்க வைத்து விடலாம். இதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஊற்றி தேங்காய் நார் மற்றும் மண் கலவையை சத்து மிக்கதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அப்போது தான் நீங்கள் விதைக்கும் உருளைக்கிழங்கு அழுகிப் போகாமல், பூச்சி புழுக்கள் தொந்தரவு இல்லாமல் செழிப்பாக வளரும். தேங்காய் உரிக்கும் போதெல்லாம் அப்படியே இதற்கென்று எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் நார் சிறந்த உரமாக எல்லா பயிர்களுக்கு இருக்கும். அதை ஒரு தொட்டியில் இருக்கும் மண்ணில் போட்டு வந்தால் மண்ணின் சத்து அதிகரிக்கும். அதில் எதை வேண்டுமானாலும் புதைத்து அறுவடை செய்து விடலாம்.

coconut-fiber2

முளைவிட்ட உருளைக்கிழங்கை இப்போது அந்த மண்ணில் சிறிதளவு ஆழத்தில் வைத்து புதைத்து வையுங்கள். ஒரு வாரத்திற்குள் உருளைக்கிழங்கு துளிர்விட்டு மண்ணிற்கு மேலே இலைகள் தழைகளுடன் சூப்பராக முளைத்துவிடும். இப்படி இலைகள் மேலே எழும்பினால் தான் உள்ளுக்குள் உருளைக்கிழங்கு அழுகாமல் அப்படியே இருக்கிறது என்பது அர்த்தம். தொடர்ந்து புளித்த மோர் கலந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள். அந்த இடத்தில் பூச்சிகள் அதிகமாக தென்பட்டால் ஒரு குச்சியை நட்டு அதில் மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஏதாவது ஒரு அட்டையை எண்ணெய் தடவி நூல் கொண்டு கட்டி வைத்து விடுங்கள். இப்படி செய்வதால் செடியை நெருங்கும் பூச்சிகள் அந்த அட்டையில் ஒட்டிக் கொண்டு விடும். இதனால் பூச்சி அரிப்பு இல்லாமல் செடிகள் நன்றாக வளரும்.

potato-planting2

உருளைக்கிழங்கு செடி நன்கு ஒரு அடிக்கு வளர்ந்து முற்ற துவங்கியதும் செடியின் இலைகளுடைய நுனி காய்ந்த சருகாகி உதிர்ந்துவிடும். இந்த காலகட்டத்தில் தான் நீங்கள் அறுவடை செய்ய வேண்டும். இப்போது நீங்கள் மண்ணைத் தோண்டிப் பார்த்தால் நிறைய உருளைக்கிழங்குகள் கிடைக்கும். மிக மிக சுலபமாக உருளைக்கிழங்கு செடியை வளர்த்து விடலாம். இதற்காக பெரிதாக செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. கஷ்டப்பட்டு பராமரிக்கவும் தேவையில்லை. எந்த விதமான ரசாயனங்களும் சேர்க்கப்படாத சுத்தமான தூய உருளைக்கிழங்குகள் நமக்கு வீட்டிலேயே கிடைப்பதால் அதை சமைத்து உண்பதில் இருக்கும் சுகமே தனிதான். நீங்களும் உருளையை புதைத்து வைத்து சீக்கிரமே அறுவடை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
மண்ணே இல்லாமல் வெறும் தண்ணீரில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி? கொத்தமல்லி தழை, புதினா இலை, இஞ்சி போன்றவற்றை அதிக நாட்கள் வரை பராமரிப்பது எப்படி தெரியுமா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.