இந்தப் பழத்தை வைத்து இப்படி ஒரு முறை அல்வா செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். இனிமேல் இந்த பழத்தை பார்க்கும்போதெல்லாம் அல்வா வேண்டும் என்று கேட்பார்கள்.

watermelon halwa
- Advertisement -

இனிப்பு என்றதும் நம் நினைவிற்கு வரும் பொருட்களில் ஒன்றுதான் அல்வா. அல்வா செய்வதில் பல வகைகள் இருக்கின்றன. அதிலும் பழங்களை வைத்து செய்யக்கூடிய அல்வாக்களின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அந்த வகையில் இன்று மிகவும் எளிமையாக எந்தவித செயற்கை நிறங்களும் போடாமல் சத்துக்கள் பல நிறைந்த தர்பூசணி பழத்தை வைத்தும் அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வெயில் காலங்களில் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு நாம் உண்ணக்கூடிய பழங்களில் தர்பூசணியும் ஒன்று. தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழம். மேலும் அதில் பல மினரல்களும், விட்டமின்களும் இருப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்க கூடியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

செய்முறை 

அரைப்பழம் தர்பூசணியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கி உள்ளே இருக்கும் கொட்டைகள் அனைத்தையும் எடுத்து விட வேண்டும். இப்பொழுது இந்த தர்பூசணி பழத்தை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட வேண்டும். பிறகு இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தர்பூசணி சாறை ஊற்ற வேண்டும். நன்றாக கைவிடாமல் கிளற வேண்டும். பிறகு இதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்க்க வேண்டும். அதன் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நெய்யை அதில் சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.

- Advertisement -

நெய் தனியாக பிரியும் அளவிற்கு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். நெய் பிரிய ஆரம்பித்த பிறகு அதில் 150 கிராம் சர்க்கரையை சேர்த்து கிண்ட வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு அல்வா வரும் வரை அதை கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.

மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் நன்றாக உருகிய பிறகு 5 முந்திரிப் பருப்பு, 5 பாதாம் பருப்பை போட வேண்டும். இவை லேசாக சிவந்த பிறகு அதில் 8 உலர் திராட்சையை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு அதை அப்படியே அல்வாவில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது அல்வாவில் அரை ஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இப்படி ரசம் வச்சா சாப்பாட்டில் ஊற்றி சாப்பிட மாட்டாங்க. அப்படியே குடிப்பாங்க. அந்த அளவுக்கு இந்த ரசத்தின் டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

பல சத்துக்கள் நிறைந்த தர்பூசணி பழத்தை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது, என்றாலும் அதை வீணாக்காமல் இப்படி அல்வா போல் செய்து கொடுத்து உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

- Advertisement -