பூக்கவே பூக்காத பூச்செடிகளை கூட 10 நாட்களில் பூக்க வைக்க கூடிய சக்தி, குப்பையில் தூக்கி போடும் இந்த கொட்டைகளுக்கு உண்டு. இதைச் செடிகளுக்கு முறையாக எப்படி கொடுப்பது?

rose3
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் நிறைய பூச்செடிகள் சீசன் வந்தால் கூட பூக்காது. ஏனென்றால் புகாத செடிகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஒரு காரணம். ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள செடிகளுக்கு, காசு கொடுத்து கடைகளிலிருந்து உரங்களை வாங்கிப் போடுவதை விட, நம்முடைய வீட்டில் நீங்கள் சாப்பிடும் பொருட்களில் இருந்து உரங்களை தயார் செய்து இயற்கையாக கொடுக்கலாம். அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல். அந்த வரிசையில் தர்பூசணி பழம் இந்த கோடைகாலத்தில் சுலபமாக கிடைக்கும்.

tharpusani-vithai-podi1

இதை நாம் சாப்பிடுவதற்காக வாங்குவோம். அதில் இருக்கும் விதைகளை வீணாகத்தான் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவோம். ஆனால், உங்களுடைய வீட்டில் பூச்செடிகள் இருந்தால் இனி அந்த கொட்டையை குப்பையில் போடாதீர்கள். அதை எடுத்து தனியாக சேகரித்து வைத்து, வெயிலில் நன்றாக உலர வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

காய்ந்த இந்த விதைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால், பொடியாகி விடும். அதன்பின்பு இந்த கொட்டைகளை செடிகளுக்கு முறையாக கொடுக்க வேண்டும். ஒரு சிறிய பிளாஸ்டிக் ஜக்கில் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி 25கிராம் அளவு இந்த தர்பூசணி விதைகளின் பொடியை போட்டு நன்றாக ஊற வைத்துவிட வேண்டும். ஒரு நாள் முழுவதும் இது அப்படியே ஊறட்டும்.

tharpusani-vithai-podi

இந்த பொடி தண்ணீரில் நன்றாக ஊறிய பின்பு, இந்த ஒரு லிட்டர் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீருடன், 10 லிட்டர் அளவு சாதாரண தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து உங்களுடைய செடிகள் முழுவதிலும் ஊற்றி விடலாம். செடிகளின் வேர்ப் பகுதியில் ஊற்றலாம். செடிகளின் இலை பகுதிகள் கிளை பகுதிகள் எல்லா இடங்களிலும் படும்படி இந்த தண்ணீரை ஊற்றலாம். உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடி, மல்லி செடி, காய்கறி செடிகள், இப்படி எல்லாம் வகையான செடிகளுக்கும் இந்த நீரை கொடுக்கலாம். இது ஒரு முறை.

- Advertisement -

இன்னொரு முறையிலும் இதை நாம் செடிகளுக்கு பயன்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கை வாங்கிக் கொள்ளுங்கள். 3 பங்கு அளவு வேப்பம் புண்ணாக்கு, 2 பங்கு தர்பூசணி விதை தூள், இதை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்தக் கலவையை ஒரு செடிக்கு, 2 ஸ்பூன் வீதம் வேர் பகுதியில் உள்ள மண்ணை கிளறி விட்டு அந்த மண்ணில் சேர்த்துவிட்டால் போதும். அதனுடைய ஊட்டச்சத்து வேர்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

rose-plant-spray

இப்படியாக 2 வாரத்திற்கு ஒரு நாள், இந்த ஊட்டச்சத்து நிறைந்த தர்பூசணி விதைகளை செடிகளுக்கு கொடுக்கலாம். இதேபோல காய்கறிகளின் கழிவு, அரிசி பருப்புகளை ஊற வைத்த தண்ணீர், கீரைகளின் கழிவை அரைத்து அந்த தண்ணீர், பிறகு உங்கள் வீட்டில் டீ போட்டால் அதில் மீதமான திப்பியை, தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீர், இப்படியாக மாற்றி மாற்றி ஊட்டச்சத்துகளை உங்களுடைய செடிகளுக்கு கொடுத்துக்கொண்டே வரவர செடிகள் சீக்கிரமே செழிப்பாக வளர தொடங்கிவிடும். கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்க தொடங்கி விடும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -