மைதானத்தின் மேற்கூரைக்கு மேல் உயரமாக சிக்ஸ் அடித்த வாட்சன் – வீடியோ

ஆஸ்திரேலியாவில் தற்போது “பிக்பேஷ் லீக்” டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் அனைத்து நாடு வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்கேற்று விளையாடிவருகின்றனர். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பல வீரர்கள் இந்த தொடரில் தொடர்ந்து அசத்தி வருகின்றனர்.

watson

ஆஸ்திரேலிய தேசிய அணியில் இருந்து 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற வாட்சன் பிக்பேஷ் மற்றும் ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறார். ஆல்ரவுண்டரான வாட்சன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்தையும் அசத்துவார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவர் அடித்த சிக்ஸ் மைதானத்துக்கு வெளியே சென்றது. தற்போது 37 வயதாகும் வாட்சன் இந்த வயதிலும் அவருக்கு இருக்கும் பலம் அசாத்தியமானது. அவர் அடித்த இந்த சிக்ஸர் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இணைப்பு :

வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக விளையாடிவருகிறார். சென்ற ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல இறுதி போட்டியில் சதமடித்து அசத்தினார். இந்த ஆண்டும் சென்னை அணிக்காக இந்த ஆண்டு இவர் விளையாடவுள்ளார்.

இதையும் படிக்கலாமே :

குலதீப் யாதவ் உலககோப்பை போட்டிகள் அனைத்திலும் பங்கேற்பார் – ரவி சாஸ்திரி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்