நம் உடலில் உள்ள 7 சக்கரங்களை இயங்கச் செய்ய மிக மிக எளிய வழி

7-chakral

நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே தனது மொழியாக்கியவர்கள் தமிழர்கள். நம் தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்களில் ‘ஆ’ முதல் ‘ஒள’ வரையிலான ஒவ்வொரு எழுத்தும், நம் உடலில் ஒவ்வோர் வேலையைச் செய்கிறது. இந்த உயிர் எழுத்துக்களை உச்சரிப்பதன் மூலமாகவே நம் உடலில் உள்ள சக்கரங்களை இயங்கச்செய்யலாம் என்கிறார்கள் யோகா பயிற்சியாளர்கள். வாருங்கள் அது எப்படி என்று பார்ப்போம்.

7-chakras

‘ஆ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஆ’ என்கிற உயிரெழுத்தை மனதுக்குள் தொடர்ந்து ஒலிக்கச் செய்தால், சஹஸ்ராரச் சக்கரம் நல்ல இயக்கம் பெறும். பிரபஞ்ச சக்திகள் நம்முள் பாயும். சுவாசம் உச்சந்தலையில் நிலைபெறும். இதன் மூலம் ஆன்ம விடுதலை, முக்தி மற்றும் பரவசநிலை பெற்று வாழலாம்.

‘ஈ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஈ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், ஆக்ஞைச் சக்கரம் நன்கு இயக்கம் பெறும். மூச்சானது புருவ மத்தியில் நிலைபெறும். அறிவில் சிறந்தவராகவும் , ஞானமுள்ளவராகவும் வாழும் வாழ்க்கையைப் பெறலாம்.

- Advertisement -

7-chakras

‘ஊ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஊ’ என்கிற உயிரெழுத்தை மனதினுள் ஒலிக்கச் செய்தால், விசுத்திச் சக்கரம் இயங்க ஆரம்பிக்கும். சுவாசமானது கழுத்து சங்குத் துடிப்பில் நிலைபெறும். இந்த இயக்கத்தினால் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வாழலாம்.

‘ஏ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஏ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், அனாகதச் சக்கரம் இயக்கம் பெறும். சுவாசமானது இதயத்தில் நிலைபெறும். இதன் மூலம் அன்பு மிகுந்தவராகவும் , படைப்பாற்றலுடனும் ஒருவர் திகழ முடியும்.

7-chakras

‘ஐ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஐ’ என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால் மணிபூரகச் சக்கரம் இயக்கம் பெறும். சுவாசமானது தொப்புள் பகுதிக்குச் சற்று கீழே நிலைபெறும். இதன் வாயிலாக கடின உழைப்புடனும் , விடாமுயற்சியுடனும் வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

‘ஓ’

தியான நிலையில் அமர்ந்து ‘ஓ’ என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், சுவாதிஷ்டானச் சக்கரம் இயக்கம் பெறும். மூச்சானது முதுகுத் தண்டின் கீழ்மையப் பகுதியில் நிலைபெறும். இதனை நன்கு இயக்கச் செய்தால், உலக இன்பங்களுக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

7-Chakras-

‘ஔ’

தியான நிலையில், அமர்ந்து ‘ஔ’ என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனதுக்குள் ஒலிக்கச் செய்தால் மூலாதாரச் சக்கரம் இயங்கத் தொடங்கும். சுவாசம் மலவாயிலுக்கு சற்று மேலே நிலைபெறும். இதன் வாயிலாக நல்ல உணவு, உறக்கம், மன நிம்மதி போன்றவற்றைப் பெறுவோம்.