ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற உதவும் அற்புத விரதம்!

0
1255
amman

அனைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்குச் சமமான ஒரு வழிபாடே ஸ்ரீகௌரி வழிபாடு என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கௌரி தேவி 108 வடிவங்களை மேற்கொண்டதாகவும் புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஆனால், 108 வடிவங்களில் கௌரியை வழிபடுவது சாத்தியம் இல்லை என்பதால், கௌரியின் பதினாறு வடிவங்களை பூஜிக்கும் வகையில் சோடஷ கௌரி வழிபாட்டை நம் முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர்.

swarnagowri

கௌரியின் பதினாறு வடிவங்களில் ஸ்வர்ணகௌரியை விரதம் இருந்து வழிபடும் மரபு இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருக்கின்றன. ஸ்வர்ணகௌரிக்கு விரதம் இருப்பது எப்படி அதனால் ஜாதக ரீதியாக என்ன பலன் உண்டு என்று பார்ப்போம் வாருங்கள்.

ஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை:

விரதத்திற்கு முன் தினம் வீடு, பூஜையறையைச் சுத்தம் செய்ய வேண்டும். தேவியின் முகத்தை ஒரு கலசத்தில் பிரதிட்டை செய்து அலங்கரிக்க வேண்டும். தேவியின் பிரதிமை இல்லாதவர்கள் சிவசக்தியின் படத்தை வைத்தும் பூஜிக்கலாம்.

swarnagowri

காலை முதல் மாலை வரை விரதம் இருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பின் இறைவியை பூஜிப்பது மிகவும் சிறப்பு தரும். அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணை தீபமும் ஏற்ற வேண்டும். முதலில் விநாயகரைத் துதித்து, பின்னர் அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். பின் மலர்களால் தேவியை அர்ச்சித்து, தேவி அஷ்டோத்ர நாமாவளியை கூறி இறைவியை வணங்க வேண்டும். பின் அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, நோன்பு சரட்டினை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும்.

swarnagowri

தீபாராதனை முடிந்த பிறகு இரண்டு நெய்தீபங்களைத் தண்ணீர் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து தீபாராதனை செய்யவேண்டும். பிறகு சுமங்கலி பெண்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்க வேண்டும்.

வீட்டில் இப்படியாக பூஜித்த பிறகு, அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று உமையவளோடு எழுந்தருளியிருக்கும் ஈசுவரனை தரிசிக்க வேண்டும். இரவு வேளையில் முடிந்த அளவில் பிரசாதம் மட்டுமே உண்ண வேண்டும்.

swarnagowri

பலன்கள்

ஜாதகத்தில் சுக்கிரன் வலுக்குன்றியோ பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ காணப்பட்டால், இல்லற வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து, தேவியின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை அமையப் பெறலாம்.

இந்த விரதம் இருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று, அனைத்து இன்பங்களையும் அடைவர்.