வீட்டில் பணம் சேர உதவும் சில எளிய வழிகள்

money1

பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம். பணத்தை எப்படி கையாளவேண்டும்? பணம் சேருவதற்கு என்ன வழி ? இப்படி சில குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றுவதன் மூலம் நிச்சயம் பணம் சேரும்.

money

 • பணம் கொடுக்கல் வாங்களின் போது எப்போதும் வலது கையை மட்டுமே உபயோகிக்கவேண்டும்.
 • வீட்டில் இருந்து வெளியில் செல்லும்போது கண்டிப்பாக ஒரு 100 ரூபாயாவது சட்டை பையிலோ அல்லது பர்சிலோ வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். ஏன் என்றால் பணத்தை ஈர்க்கும் சக்தி பணத்திற்கு உண்டு. இதனால் நம்மிடம் பணம் சேரும்.

money bag

 • நமது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் முன்பு மகாலட்சுமியை மனதார நினைத்து இதில் அதிகம் பணம் சேர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பணத்தை வைக்க வேண்டும். பெண்கள் பொதுவாக சமயலறையில் ஏதாவது ஒரு டப்பாவில் பணத்தை சேமிப்பர் அவர்களுக்கும் இது பொருந்தும்.
 • வெள்ளிக்கிழமைகளில் மாலை 7 மணிக்குள் ஒரு சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு அதில் சிறிது மஞ்சள் கலந்து பின்பு மேற்கு முகமாக அமர்ந்து கீழே உள்ள மந்திரத்தை ஜெபிக்கவும். பின் மஞ்சள் கலந்த அந்த நீரை பணப்பெட்டியின் மீது சிறிது தெளிக்கவும். முன்பு கூறியது போல பெண்கள் சமைலறையில் சேமிக்கும் பண பெட்டிக்கும் இது பொருந்தும்.
  மந்திரம்:
  “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||”

money

 • பணத்தை வைக்க நாம் உபயோகிக்கும் பர்ஸ், பண பெட்டி, சிறிய டப்பா போன்றவை எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். சுத்தமான இடத்திலே லட்சுமி எப்போதும் தங்க விரும்புவாள்.
 • பணத்தை என்னும்போது சிலர் எச்சில் தொட்டு எண்ணுவர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்வது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாகும். இதேபோல நாம் ஏதேனும் நூல்களை படிக்கும் சமயத்திலும் எச்சில் தொட்டு பக்கங்களை திருப்ப கூடாது.

money

 • வரவு செலவு கணக்குகளை குறித்துவைத்துக்கொள்ளும் நோட்டின் முதல் பக்கத்தில் “ஸ்ரீ அல்லது சுபலாபம்” என்று எழுதி வைப்பது சிறந்தது.

இதையும் படிக்கலாமே:
இரவில் ஏன் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது – அறிவியல் உண்மை

money

 • தொழில்புரிவோர் தாங்கள் தொழில் செய்யும் இடத்தில் தினமும் தொழிலை ஆரமிக்கும் முன்பு ஊதுவத்தியை ஏற்றி கீழே உள்ள மந்திரத்தை கூறுவதன் மூலம் பணம் சேரும்.
  மந்திரம்:
  “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||”