இரவில் ஏன் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது – அறிவியல் உண்மை

nail

பொதுவாக பல வீடுகளில் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவதுண்டு. ஏன் என்று கேட்டால், வெட்டக்கூடாது என்றால் வெட்டக்கூடாது அவ்வளவு தான் என்று கூறுவர். ஆனால் நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல. அவர்களின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. நம் முன்னோர்கள் ஏன் அப்படி சொன்னார் என்று பார்ப்போம் வாருங்கள்.

nail-cutting

இன்று போல அந்த காலத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எதுவும் கிடையாது. சிறு விளக்குகளின் ஒளியை கொண்டே அனைவரும் வாழ்ந்தனர். அப்படி இருக்கையில் இரவு நேரத்தில் நகம், முடி போன்றவற்றை வெட்டும்போது அது காற்றில் பறந்து சென்று உணவில் விழுந்து விட்டால் அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.

நகமோ முடியோ விழுந்த உணவை அப்படியே உண்டால் வயிற்று உபாதைகள் வரக்கூடும். இதனால் இரவு நேரங்களின் நகம் மற்றும் முடியை வெட்ட வேண்டாம் என்று கூறினார். ஆனால் ஆன்மிக ரீதியாகவும் இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

hair cutting

பொதுவாக விளக்கு வைத்த பின்பு எதையும் பிறருக்கு கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் மகாலட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்றொரு நம்பிக்கை இன்றளவும் இருக்கிறது. பிறருக்கு பொருளை கொடுத்தாலே மகாலட்சுமி சென்றுவிடுவாள் என்றால் நம் உடலின் ஒரு அங்கமாய் விளங்கும் நகம், முடி போன்றவை நம் உடலை விட்டு நீக்கினால் மகாலட்சுமி நிமிடம் தங்கமாட்டாள் என்பதால் இரவு நேரத்தில் நகம், முடி போன்றவற்றை வெட்டக்கூடாது என்று கூறுவர். இதே காரணத்திற்காக தான் வெள்ளிக்கிழமையும் நகம், முடி போன்றவற்றை வெட்டக்கூடாது என்று கூறுவார்.

nail-cutting

இதையும் படிக்கலாமே:
ஏழேழு பரம்பரை என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா ?

இப்படி நம் முன்னோர்கள் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் ஒரு காரணத்தை வைத்துள்ளனர். அதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல நடப்பதே சிறந்தது.