நீங்கள் புதுத்துணி அணியும் பொழுது தரித்திரம் பிடித்தது போல் இப்படி நடக்கிறதா? அப்படின்னா இத செய்ய மறந்துடாதீங்க!

cloth-manjal-kumkum

நாம் ஒவ்வொரு முறை புதுத்துணி அணியும் பொழுதும் பல விஷயங்கள் நடப்பதை கவனி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். இது பலருக்கும் தன்னுடைய சொந்த அனுபவத்தில் நடப்பதை என்றாவது உணர்ந்து இருக்கலாம். அதாவது புதிதாக ஒரு துணியை வாங்கி போடும் பொழுது, அந்த துணி திடீரென கிழிந்து விடுவது, நீங்காத கறை உண்டாவது அல்லது உடம்பு சரியில்லாமல் போய் விடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இதற்கு வஸ்திர தரித்திரம் என்று பெயராகும். ஒவ்வொரு பொருளுக்கும் தரித்திரம் உண்டு. தரித்திரங்கள் லட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வகையில் இந்த வஸ்திர தரித்திரம் ஏன் நிகழ்கிறது? இதற்கு பரிகாரம் என்ன? இதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

blood-stain-in-cloth

வஸ்திர தரித்திரம் ஒருவருக்கு ஏற்படுவதற்கு அவர்களுடைய கர்மவினையும் காரணமாகும். செய்த பாவத்திற்கு ஏற்ப பலா பலன்கள் பல்வேறு தரித்திரங்கள் மூலமாக நம்மை தொற்றிக் கொள்கின்றன. அது போல் வஸ்திரத்திற்கும் தரித்திரம் உண்டு. புதிதாக ஒரு துணியை நாம் போடும் முன்பு கட்டாயம் அதை ஒரு முறை தண்ணீரில் அலசி விட்டு தான் போட வேண்டும். பல பேருடைய கைகளில் பட்டு வரும் புதிய துணியில் தோஷம் உள்ளது. அதனை ஜலத்தினால் சுத்திகரித்து பின்னர் அணிந்து கொள்வது நலமாகும்.

முந்தைய காலத்தில் எல்லாம் எந்வொரு புது துணியையும் மஞ்சள் தடவாமல் அதனை அணிந்து கொள்ள மாட்டார்கள். புதிய வஸ்திரத்தை சாமி படத்தின் முன்பு வைத்து அதற்கு மஞ்சள் தடவி விட்டு பின்னர் அணிந்து கொள்வது முறையாகும். இது நல்ல நாள், விசேஷம் என்று மட்டும் செய்வது போதாது. எந்த துணி புதிதாக வாங்கினாலும் இதனை செய்வது தோஷம் நீக்க வல்லது என்று சாஸ்திரம் கூறுகிறது.

வஸ்திரத்திற்கு ஏற்படும் தோஷம் தேகத்திற்கு ஏற்படும் தோஷத்திற்கு இணையானது. இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகவும் செய்யலாம். அதனால் தான் பிறந்த குழந்தைக்கு ஒரு பொழுதும் புதிய துணியை உடுத்துவது இல்லை. ஏற்கெனவே பயன்படுத்திய பழைய துணியை தான் அணிவிப்பார்கள்.

பிறந்த குழந்தைகளின் துணி மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அணியும் உடைகள் போன்றவற்றை ஒரு பொழுதும் வெயிலில் உலர்த்த கூடாது. நிழல் படும் இடங்களில் உலர்த்துவது மிகவும் நல்லது. இதுபோன்ற துணிமணிகளில் பட்சி தோஷம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் தான் இவ்வாறு கூறப்பட்டது. பட்சி தோஷம் என்பது என்ன தெரியுமா? மேலே பறக்கும் பட்சிகளின் நிழல் ஆனது குழந்தைகளின் துணி மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்களின் துணி மீது படுவது தோஷத்தை உண்டாக்கும். அதனால் தான் அதனை வெயிலில் நேரடியாக போடாமல் நிழல் படும் இடங்களில் போட வேண்டும் என்று கூறப்படுவது உண்டு.

vasthiram-manjal

புதிய துணி உடுத்தும் பொழுது கிழிந்து விடுவது, அதனை உபயோகப்படுத்த முடியாமல் போவது, நெருப்பு பட்டு ஓட்டை விழுவது, ரத்தக்காயம் ஏற்படுவது, உடல்நிலை சரி இல்லாமல் போவது, உடம்பில் அலர்ஜி உண்டாவது போன்ற அறிகுறிகள் வஸ்திர தரித்திரத்தை குறிக்கிறது. இந்த தரித்திரம் நீங்க புதிய துணி வாங்கிய உடன் அதற்கு மஞ்சள் தடவி சாமி படத்தின் முன்பு வைத்து விட்டு, பின்னர் தண்ணீரில் ஒருமுறை அலசி வெயிலில் உலர்த்தி அதன்பின் பயன்படுத்துவது மிகமிக நல்லது.