மோதிர விரலைத் தவிர மற்ற விரல்களில் மோதிரம் அணிபவரா நீங்கள்? அப்படினா இத மட்டும் தெரிஞ்சுக்கிட்டா இந்த விரலில் தான் இனி மோதிரம் அணிவீங்க!

- Advertisement -

மோதிரம் அணியக்கூடிய ஒரு விரலாக மோதிர விரல் இருக்கிறது. அந்த விரலைத் தவிர மற்ற விரல்களிலும் மோதிரங்கள் அணிவது உண்டு. குறிப்பாக தங்க மோதிரத்தை மோதிர விரலில் மட்டுமே அணிய வேண்டும் என்கிற ஒரு சாஸ்திரங்கள் உண்டு. மற்ற விரல்களை காட்டிலும் மோதிர விரலில் தங்கம் அணிவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம்! இப்படி விரல்களில் மோதிரம் அணிவதால் உண்டாகக் கூடிய பலன்களை பற்றிய ஆச்சரியப்படும் தகவல்களை தான் இந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொள்ளும் பொழுது இடது கை மோதுர விரலில் மாற்றிக் கொள்வது உண்டு. இது காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை சம்பிரதாயமாக இருக்கிறது. இதனால் இதயத்துடன் ஒரு தொடர்பு ஏற்படுவதாகவும் நம்பப்படுகிறது. அதனால் தான் வலது கையை காட்டிலும், இடது கை மோதிர விரலில் மோதிரம் அணிவது சிறப்பிற்குரியதாக இருக்கிறது.

- Advertisement -

மோதிர விரலை தவிர சிலர் கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், சுண்டு விரலில் கூட மோதிரங்கள் அணிவதை நாம் பார்த்திருப்போம். கட்டை விரலில் மோதிரம் அணிவதால் நாட்பட்ட நோயிலிருந்து கூட நாம் மீள முடியும் என்கிறது ஜோதிடம். கற்கள் எதுவும் இல்லாத, கைகளுக்கு சரியான பொருத்தம் உள்ள ஒரு வெள்ளி மோதிரத்தை கட்டை விரலில் நீங்கள் அணிந்து கொண்டால் ஆரோக்கியம் மேம்படுவதாக கூறப்படுகிறது. எனவே கட்டை விரலில் மோதிரம் அணிந்தால் வெள்ளியில் அணிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக பெண்கள் இப்போது ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதை அதிகம் விரும்புகின்றனர். கைகளை அசைத்து அசைத்து பேசும் பொழுது அந்த மோதிரமும் பளிச்சென தெரியும். இதனால் ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிபவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் அவர்கள் நினைத்தபடி அமையும். குடும்பம், படிப்பு, வேலை என்று எதில் ஈடுபட்டாலும் அதில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். ஆளுமை திறன் அதிகரிக்க ஆண், பெண் இருபாலரும் ஆள்காட்டி விரலில் மோதிரம் அணியலாம்.

- Advertisement -

நடுவிரலில் மோதிரம் அணிந்தால் வசீகரமாக தோற்றமளிப்பார்கள். உங்களுடைய கைகள் ரொம்பவே அழகாக தெரியும். இதனால் உங்களுடன் இருப்பவர்களுக்கு உங்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். திருமண பருவத்தில் இருப்பவர்கள் நடுவிரலில் மோதிரம் அணிந்து கொள்ள முயற்சி செய்யலாம். நடுவிரலில் மோதிரம் அணிய வேண்டுமென்றால் தங்கத்தால் அணிவது ரொம்பவும் சிறப்பிற்குரியது. காதலர்கள் அல்லது தம்பதியர்களுக்குள் பிரச்சனைகளை குறைக்க கூடிய ஆற்றலும் நடுவிரல் மோதிரத்திற்கு உண்டாம்.

இந்த எல்லா விரல்களையும் தாண்டி சிலர் சுண்டு விரலில் மோதிரம் அணிவதை பார்த்திருப்போம். பொதுவாக சுண்டு விரலில் மோதிரம் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தங்க மோதிரத்தை சுண்டு விரலையில் அணிவது துரதிருஷ்டத்தை கொடுக்குமாம். மேலும் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதால் சுண்டு விரலில் தங்கத்தை தவிர்க்கவும். மற்ற உலோகங்களில் செய்யப்பட்ட மோதிரத்தை சுண்டு விரலில் அணிவதால் ஹார்மோன்கள் சமநிலைப்படும். உள்ளுணர்வு அதிகரித்து எதையும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை பெறலாம். சுண்டு விரலில் மோதிரம் அணிபவர்கள் செம்பினால் ஆன மோதிரத்தை அணிந்து பாருங்கள், அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். எந்த விரலில் மோதிரத்தை அணிந்தாலும் உங்கள் கையில் பணப்புழக்கம் இருக்க மோதிர விரலில் மோதிரம் அணிவது தான் முறையாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -