துளசி செழிப்பாக வளர மிக எளிய வழிகள்

thulasi

துளசி என்பது ஒரு தாவரமாக மட்டும் அல்லாமல், அதனை மகாலக்ஷ்மியாகவும் நாம் வழிபடுகின்றோம். இது மருத்துவ குணம் நிறைந்த ஒரு தாவரம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. துளசி செடியை நாம் பார்க்கும் போதே நம் மனஅழுத்தம் குறைந்து விடுகின்றது. துளசி செடியை நம் வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றால் செடியானது நம் வீட்டில் பசுமையாக வளர வேண்டும். அப்படி பசுமையான வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

thulasi chedi

ஓர் அளவிற்கு மேல் பொதுவாக துளசி செடியானது பெரிதாக வளர்ந்து வரும் போது மேல் பகுதியில் துளசி விதைகள் வளர ஆரம்பித்துவிடும். இதனை நாம் வெட்டாமல் வைத்திருந்தால் செடிகள் செழிப்பாக வளர தாமதம் ஏற்படும். எல்லா சத்துகளும் விதைகளிலேயே போய் சேர்ந்துவிடும். ஆகையால் இந்த விதைகளை வெட்டி விடுவது நல்லது. இதை வெட்டும்போது சிறு கத்தரிகோல் வைத்தோ அல்லது செடிகளை வெட்டும் கருவிகளிலோ தான் வெட்டி எடுக்க வேண்டும். கைகளாலோ, நகங்களாலோ உடைத்தோ, கிள்ளியோ எடுத்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

செடி செங்குத்தாக வளர்ந்து இருக்கும் போது, அதன் பக்கவாட்டில் கிளைகள் வளர வேண்டுமென்றால், அந்த கிளைகளின் நுனியை தண்டோடு வெட்டிவிட வேண்டும். அந்த தண்டினை வெட்டும் பகுதியிலிருந்து இரண்டாவது கிளை வளர்ந்து விடும். இப்படியாக செடியானது கிளைகளைக் கொண்டு வளரும் போது தான் அடர்ந்த தன்மையைப் பெறும்.

thulasi

நாம் பூஜைக்காகவோ அல்லது வேறு சில தேவைகளுக்காகவோ ஒரு செடியிலிருந்து இலைகளை பறிக்க வேண்டும் என்றால், செடியில் தண்டுடன் தான் பறிக்க வேண்டும். இலைகளை மட்டும் பறிக்கக்கூடாது. நாம் இலைகளை மட்டும் பறிக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் வேறு இலைகள் துளிர்க்காது. தண்டோடு வெட்டி எடுக்கும் போது புதிய கிளைகள் வளர்ந்து விடும்.

- Advertisement -

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என்பது மிக முக்கியமான ஒன்று. அதனை சரியான முறையில் ஊற்ற வேண்டும். மழை காலங்களில் தண்ணீர் வேர்ப்பகுதியில் அதிகமாக தங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ மண்ணை குச்சியை விட்டு கிளறிய பின்பு தண்ணீர் ஊற்றினால் செடி வளர்ச்சிக்கு நல்லது.

Thulasi

உங்களால் முடிந்தால் மாதம் ஒரு முறையாவது, நம் செடிகளை பூச்சி அறிக்காமல் இருக்க மருந்துகளை வாங்கி உபயோகிக்கலாம். ஒரு தாவரத்திற்கு சூரிய ஒளி மிக முக்கியம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால் துளசிக்கு 4 இருந்து 5 மணி நேரம் சூரிய ஒளி இருந்தால் போதுமானது. அதற்கு தகுந்த இடத்தில் செடியை வைத்துக் கொள்ளுங்கள். அதாவது மரத்தின் நிழலிலோ, சுவற்றின் நிழலிலோ வைத்து பராமரிக்கலாம்.

துளசியை நாம் கடவுளாக பார்ப்பதினால் அதற்கு குங்குமப் பொட்டு வைத்து, பூ வைத்து, கோலம் போட்டு, அலங்காரம் செய்து காலை மாலை இரண்டு வேளைகளிலும் அகல் விளக்கை ஏற்றி வைத்து வழிபடுவதன் மூலம் துளசி செடியானது என்றும் செழிப்புடன் நம் வீட்டில் வளரும்.

இதையும் படிக்கலாமே
1000 கால் மண்டபம் பற்றி இதெல்லாம் தெரியுமா?

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thulasi sedi valarpathu eppadi. How to grow tulsi plant in Tamil. Thulasi sedi valarpu. Thulasi chedi valarpu.