இந்த முறை உங்க பப்பு வேகாது முடிந்தால் இந்த உலகக்கோப்பையில் இந்த அணியை வென்று காட்டுங்கள் பார்ப்போம் – சவால் விட்ட மொயின் கான்

Moin-Khan

இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் 2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி விட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவும் என்றும் இந்த இரு அணிகளில் ஒரு அணி கோப்பையை கைப்பற்றும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

worldcup

இதுவரை இந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிகளில் 7 முறை நேராக மோதியுள்ளது. இந்த 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக எழுச்சி அடைந்ததே கிடையாது. அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

தற்போது 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் ஜூன் 16ஆம் தேதி ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை நிச்சயம் பாகிஸ்தான் வீழ்த்தும் என்று மொயின் கான் தெரிவித்தார். தற்போது உள்ள பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி வருகிறார்கள்.

Pakistan

இந்த சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணியை கட்டுப்படுத்த முடியும். அதனால் இந்திய அணியை எளிதில் வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன். இந்தமுறை உலககோப்பை போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணியின் தொடர் வெற்றி என்ற எழுதப்படாத ஒரு நம்பிக்கையை முறியடிப்போம் என்று மொயின் கான் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தல தோனி தொடர்ந்து மூன்று அரைசதம் விளாச இதுவே காரணம் – செம மேட்டர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்