வீட்டில் எப்போதும் லட்சுமி கடாச்சம் வீச என்ன செய்ய வேண்டும்?

Mahalakshmi_1

வீடு லட்சுமி கடாச்சமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதே மக்கள் பலரின் என்ன ஓட்டம். அனால் லட்சி எல்லா வீட்டிலும் குடியிருப்பதில்லை. மாறாக எவரெவர் தன்னுடைய வீட்டை மங்களகரமாக வைத்துக்கொள்கிறார்களோ அவர்களது வீட்டிலேயே லட்சுமி குடியிருக்கிறார்கள். ஒரு வீட்டை எப்படி மங்களகரமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

வாசலில் பசுஞ்சாணம் தெளித்து அரிசி மாவில் கோலமிட்டு முகப்பில் மாவிலை தோரணம் கட்டும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.

மஞ்சள், குங்குமம், வளையல், சீப்பு, கண்ணாடி, புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானம் அளிக்கும் வீட்டில் லட்சுமி  குடியிருப்பாள்.

குழந்தைகள் முதன் முதலில் எழுதி பழகும் பொழுது தானியத்தை பரப்பி அதில் விரல்கள் மூலம் எழுதி பழகினால் வித்யாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, பறவைகளுக்கு தானியம் வைப்பது, பூஜை அறையை தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவற்றை செய்யும் வீடுகளிலும் லட்சுமி கடாட்சம் வீசும்.