பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலக என்ன தானம் செய்ய வேண்டும்

murugan-1
- Advertisement -

தானம் என்பது அனைவரும் செய்யவேண்டிய ஒரு மிக சிறந்த காரியம். தானம் செய்வதனால் எத்தகைய பாவத்திற்கும் விமோச்சனம் உண்டு என்று ஆன்றோர்களால் கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த தானம் செய்தால் என பலன்களை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

நெய் தானம்:

- Advertisement -

ghee

உடலில் தீராத நோய் உடையவர்கள் மற்றும் பாவக்கிரக திசை நடப்பவர்கள், சுத்தமான நெய்யை வெண்கல கிண்ணம் கொண்டு தானம் அளிப்பதன் மூலம் உடல் பிணையில் இருந்து விடுபடலாம். அதோடு கிரகங்களும் சாந்தம் அடையும்.

அரிசி தானம்:

- Advertisement -

arisi

ஒருவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும், பூர்வ ஜென்ம பாவங்களும் விலக, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அரிசியை தானமாக அளிப்பது சிறந்தது.

ஆடைகள் தானம்:

- Advertisement -

cloth

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழவும், பெற்ற குழந்தைகளுக்கு பிரச்சனை வராமல் இருக்கவும் ஆடைகளை தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும். மேலும் ஆடை தானத்தினால் பெண்களிடம் நல்லுறவு ஏற்படுவதோடு சுக போக பாக்யவிருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது இன்னும் சிறந்தது.

தீப தானம்:

deepam

கண்களில் கோளாறு இருப்பவர்கள் பௌர்ணமி தினத்தன்று அம்மன் கோயிலிற்கு சென்று 10 நெய் தீபம் ஏற்றுவது சிறந்தது. மேலும் மின் வசதி இல்லாத ஏழைகளின் வீட்டிற்கோ அல்லது கோவிலிற்கோ மின் வசதி செய்துகொடுப்பதன் மூலம் உங்களின் பார்வை எப்போதும் பளிச்சென்று இருக்கும்.

தேன் தானம்:

honey

நீண்ட நாட்களாக புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று வெண்கல கிண்ணத்தில் சுத்தனமான தேனை தானம் அளிப்பது சிறந்தது. இதனால் அவர்கள் விரைவில் புத்திர பாக்கியம் பெறுவர்.

- Advertisement -